வெள்ளி, 19 மார்ச், 2021

டாக்டர் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் வேண்டுகோள்

May be an image of 1 person, sitting and indoor

Anitha Manirathinam : அனிதாவின் ஆரம்பக்கால போராட்டம் முதல் இறுதிவரை உடன் நின்றவர்... இன்றும் நிற்கிறார்... ..  என்றும் நிற்பார்....
அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்பவர்.
அனிதாவின் இறப்பின் போது சனாதனக் கும்பல்  அண்ணனின் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசினர். அனைத்தையும் எதிர்கொண்டு அனிதாவிற்காக இன்று வரை உடன் நிற்கிறார்.
தமிழக வரலாற்றில் அனிதா மறைக்க முடியாத வரலாறு, அந்த வரலாற்றை எழுத் துணை நின்றவர் அண்ணன் சிவசங்கர் எஸ் எஸ்.
அவரை எதிர்த்தே அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தூண்டி விட்டு போட்டியிடச் செய்து "நன்றி கெட்ட அனிதாவின் குடும்பம்" என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிடாதீர்கள்.
தயவு செய்து தலைமையிடம் சொல்லி வேட்பாளரை மாற்றுங்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாண்டியனை வெளியூரில் ஒளித்து வைத்துக்கொண்டு மனுதாக்கல் செய்துள்ளீர்கள்.


நீங்கள் போட்டியிடுவதால் அண்ணன் அவர்களின் வெற்றிக்கு  எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. உங்களின் சுயநலத்திற்காக அனிதாவின் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் BSP யின் உள்ளூர், மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்படுவதைத் தமிழகத் தலைமை கண்டுக்கொள்ளாமல் இருப்பது மேலும் வேதனையளிக்கிறது.
மேலும் தங்கை அனிதாவின் பெயரை பயன்படுத்தி BSP கட்சியினர் தேர்தல் செலவிற்காக பணம் வசூலிப்பது அனிதாவின் தியாகத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

திமுகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், அதற்கெல்லாம் பதிலாக என்னால், அண்ணன் சிவசங்கர் எஸ் எஸ் அவர்களை ஆதரித்து ஈராயிரம் காரணங்களைச் சொல்ல முடியும்.
இந்த மாதிரி கேவலமான அரசியல் செய்தீர்கள் என்றால் தமிழகத்தில் எப்பொழுதும் வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவுடன் போட்டி போடும் பிஜேபியுடன் தான் போட்டி போடனும்..
தம்பி வேட்பாளராக போட்டியிடும் தகவலை தயக்கத்துடன் அண்ணன் சிவசங்கர் எஸ் எஸ் அவர்களிடம் சொன்ன போது, "விடுங்க மணி பாத்துக்கலாம் அரசியல் புரிதல் இல்லாமல் ஆரம்ப காலத்தில் கழகத்தை எதிர்த்து அரசியல் செய்த தம்பிகள் பலர் தற்போது நம்முடன்தான் பயணிக்கிறார்கள், தம்பி பாண்டியனும் புரிந்துக் கொண்டால் சரியாகி விடுவார். கவலைப்படாதீர்கள் வேலையை பாருங்கள்" என்று எங்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
நிச்சயம் பண்பாளர் அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ்
  அவர்கள் வெற்றி பெறுவார்.
குறிப்பு:யானைகள் ஜக்கி வாசுதேவ் வழியில் செல்லவும்.மீறி வந்தால் .....???

வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.வருபவர்களிடம் ஒரு கேள்வி "உங்களுக்கு ஏன் BSPயில் சீட்டு தரவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக