திங்கள், 22 மார்ச், 2021

ராகுல் காந்தி கேரளாவில் பிரசாரம் இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு கனவாகவே இருக்கிறது

 தினத்தந்தி : திருவனந்தபுரம்,  140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. கேரளாவில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணிகளுக்கு இடையே மும்முனை ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி இன்று கொச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.



பிரசார நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமையே தவிர அவரகளின் சொந்த அமைப்புகளுக்கு கொடுப்பதல்ல.. 

இங்கு (கேரளா) இடதுசாரிகள் (இடது ஜனநாயக முன்னணி) அரசும், டெல்லியில் பாஜக அரசும் மோசமாக தோல்வியடைந்துள்ளது. கேரளாவில் நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால் வேலை என்பது உங்களுக்கு உண்மையாக இருக்காது மாறாக ஒரு கனவாக இருக்கும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக