திங்கள், 22 மார்ச், 2021

ட்ரெண்ட் அறிக்கை: திமுக கூட்டணி 200 பிளஸ்! பல தொகுதிகளில் அதிமுக டெப்பாசிட் காலி?

May be an image of text

ஆலஞ்சியார்  : கருத்துக்கணிப்புகளும் திணிப்புகளும்..
பல்வேறு தொலைக்காட்சிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் ஆளுக்கொரு கருத்தை பதிவிட்டு ஐந்து சட்டமன்ற தேர்தல் களத்தைை சூடாக்கியிருக்கிறார்கள் ..
தமிழகத்தை பொறுத்தவரைை திமுக வெல்லும் என தொடர்ந்து ஏறக்குறைய எல்லா கணிப்புகளும் சொன்னாலும் சில ஆரியபாசத்தில் அதிமுக விஸ்வரூபமெடுக்கும் என திசை திருப்ப புதிய உக்தியை கையிலெடுத்திருக்கிறார்கள் ..
அமுமுக வாக்கை பிரிக்கும் மய்யம் பிரிக்குமென தங்களுக்கு சமாதானம் செய்துக்கொள்கிறார்கள் .. களநிலவரத்தை யாரும் உணரவோ அல்லது அதை செய்தியாக்கி தரவோ முயவில்லை..


அதிமுக அமைச்சர்கள் தொகுதியிலேயே முடங்கி கிடப்பதும், சிலரை ஊர்மக்கள் உள்ளே விட மறுப்பதும் செய்திகள் ஆவதில்லை .. ஒபிஎஸ் சில இடங்களில் எதிர்ப்பின் காரணம் திருப்பியதெல்லாம் சமூகவலைத்தளங்களில் சிரிக்கிறது ..  
மாநிலத்தின் முதல்வர் பேசுவதை கூட நின்று கேட்க மனமில்லை.. ஆம் முதல்வரை போல பேசாமல் திமுககாரர்கள் குண்டாக இருக்கிறார்களென பேசுகிறார்..தன்னை விவசாயி என்பவர் மக்கள் முன் எட்டுவழிச்சாலை பற்றி பேசவேண்டியதுதானே..
ஆனால் மக்கள் மௌனப்புரட்சி செய்வதாக சொல்கிறார்கள் .. ஆளும்கட்சிக்கு பெரிய எதிர்ப்பலை இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று தோற்று நிற்பது வேடிக்கை..
..
அதிமுகவின் அழிவு அதிமுக ஆட்சியின் இறக்கம் பாஜகவோடு கைக்கோர்த்ததில் தொடங்கியது .. பாஜக பெயரைச் சொன்னாலே கோபடும் தமிழர்களிடத்தில் (நோட்டாவிற்குகீழே) காலடியில் வைத்திருந்தவர்கள் இன்று அதிமுக அதற்கு களம் அமைத்து தந்தது அதற்கு பின்னடவையே தரும் ..  வேட்பாளர் தேர்வில் தொடங்கி யார் கை ஓங்கவேண்டுமென்பதுவரை முதுகில் குத்தும் போர் நடந்துதான் வருகிறது இதில் வல்லவரான எடப்பாடி சற்று முன்னில் ..பன்னீரின் அரசியலை முடிவிற்கு கொண்டுவர பெரும்பாடுபடுவதும் தெரிகிறது..
..
அமுமுக அதிமுகவின் வாக்குவங்கி என கருதபடும் சாதிய வாக்குகளை கூறுபோடுகிறது கூடவே பன்னீரின் துரோகமும் தொடர்ந்து அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் இன்று திமுகவை ஆதரிக்கிறார்கள் அதிமுக கரைவேட்டியைை கூட மாற்றாமல் தாங்கள் திமுகவிற்கு வாக்களிக்க போவதாக ஸ்டாலின் நிறைய மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பாரென நம்புவது அவர்களின் பேச்சில் தெரிகிறது.. மய்யத்தை எல்லாம் பொருட்டாக கருத தேவையில்லை சுயநலம் அவரது பேச்சிலும் செயலிலும் அப்பட்டமாக தெரிகிறது கல்விக்கொள்கை மொழிக்கொள்கையில் அவரின் கருத்தே அவரை தமிழகம் புறந்தள்ள போதுமானது.. இந்தமுறை பொய்களால் ஆன பிம்பம் நாதக உடைத்தெறியபடும் சீமானின் புளுகுகை கேட்டு சிரிக்கிறார்கள்
..
கருத்துக்கணிப்புகள் திமுக வெல்லும் அதிலும் அபார வெற்றிபெறும்,என வந்தவுடன் உளவுத்துறை அதை உறுதி செய்தது அதிமுக முந்துவதை போல செய்திவெளியிட ஆதரவு ஊடகங்கள் பணிக்கபட்டு செய்திகள் வருவதாக மூத்த அதிகாரி சொல்லிச் சிரிக்கிறார்..
மக்கள் மிக தெளிவாக தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பன்னீர் எடப்பாடி பாண்டியராஜன் போன்றவர்களை வைத்து ஆர்எஸ்எஸ் கேள்விக்குறியாக்கிவிடும்.. கல்வி எட்டாக்கனியாக்கிவிடுவார்கள் சமஸ்கிருதம் படிக்காமல் தமிழர்கள் ரௌடிகளாக மாறுவதாக திமிரில் ஒருவன் பேசுகிறானென்றால் எவ்வளவு திமிர் வேண்டும் .. எழவே முடியாமல் புதைக்க தயாராகிவிட்டனர் .. இனி பொறுப்பதற்கு ஒன்றுமில்லை தமிழகம் அதிமுக அடிமைகளை விரட்ட தயாராகிவிட்டது..
..
முன்பு திமுக காலத்தின் கட்டாயம் இப்போது திமுகவை தோற்கபடிப்பது காலத்தின் தேவையென கமல் சொல்கிறார்.. இன்னும் ஏன் இடஒதுக்கீடென உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்தை சொல்கிறார்களே அதை தடுக்கும்வரை வேண்டும்.. சமஸ்கிருதத்தை மூத்தமொழியென பொய்யைை திரித்து தமிழை தாழ்த்த எண்ணி +12 பாடத்தில் சேர்ப்பதை அழிக்க திமுக வேண்டும்.. கீழடி தமிழர் பண்பாட்டை தமிழனின் பெருமையை தமிழரின் நாகரீகத்தை பாரத நாகரீகமென தமிழ்வளர்ச்சி துறைக்கொண்டே சொல்ல வைப்பதை தடுக்க திமுக வேண்டும்.. தமிழ் குழந்தைகளின் உயர்க்கல்வி கனவை சிதைக்கும் பாசிச திமிரை ஒடுக்க திமுக வேண்டும்.. தமிழை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளை விரட்டிட திமுக வேண்டும்.. குறிப்பாக இம்மண்ணில்
பார்பனீயம் ஒழிக்கபடும்வரை திமுக தேவைபடும்.. சனாதனம் வர்ணகோட்பாடு சாதிமதவெறி ஒழிக்கபடும்வரை திமுக தேவைபடும்.. இந்தியாவிற்கு வழிகாட்டுவதற்கு திமுகவின் தேவை அவசியம்.. நிறைய அரசியல்வாதிகள் ராஜாஜி தொடங்கி பார்த்தாயிற்று .. பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தோற்றுவித்ததின் நோக்கம் நிறைவேறும் வரை திராவிட இயக்கம் உயிர்ப்போடே இருக்கும்..
திமுக தமிழகத்தின் தேவை
திமுக தமிழகத்தின் வளர்ச்சி
நம்பிக்கை எதிர்பார்ப்பு .. அதைதான் கருத்துகணிப்புகள் காட்டுகிறது..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக