ஞாயிறு, 7 மார்ச், 2021

Aazhi Senthil Nathan: மொழிபெயர்ப்பு, பதிப்புத் துறைகளிலும் பிற துறைகளிலும் செயல்படும் பலருக்கும் ..

Aazhi Senthil Nathan : · நண்பர்களுக்கு, ஒரு தனிப்பட்ட அழைப்பு. என்னுடன் மொழிபெயர்ப்பு, பதிப்புத் துறைகளிலும் பிற துறைகளிலும் இணைந்து செயல்படும் பலருக்கும் இது என் தனிப்பட்ட அழைப்பு. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆழி பதிப்பகம் அரங்குடன் (எண் 274), இந்த முறை எங்கள் மொழிபெயர்ப்பு நிறுவனம் தொடர்புடைய ஒரு அரங்கையும் போட்டிருக்கிறோம். எண் 162 - ஐலேசா (Ailaysa). புத்தகக் கடைகளுக்கு நடுவில் புத்தகங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்ப கடை அது.
ஐலேசா என்பது என்ன? அது ஒரு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம், சேவை, தீர்வு. அதில் என்னதான் இருக்கிறது?
நீங்கள் எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, பதிப்பாளராக மட்டுமில்ல வாசகராக இருந்தால்கூட இந்த தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது பலனளிக்கும்.
கூகிள் டிராஸ்லேட் பயன்படுத்தியிருப்பீர்கள். முகநூல்கூட பல மொழி பதிவுகளை உங்களுக்காகத் தமிழில் தானகவே மொழிபெயர்த்து அளிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் நிறைய பிழைகளுடனும் படிக்கக் கடினமானதாகவும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் Machine Translation என்கிற அந்தத் தொழில்நுட்பம் இனி தவிர்க்க இயலாத ஒன்று.
ஆனால் அந்த தானியங்கு மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளைக் கடந்துசெல்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதைத்தான் எங்களுடைய ஐலேசா (Ailaysa.com) வழங்குகிறது. Machine Translation Post-Editing என்கிற புதிய மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் அது.
அது உங்கள் பணிச்சுமையைக் குறைக்கிறது. மொழிபெயர்ப்பு வேகத்தை பல மடங்கு அதிகரித்து, ஆனால் அதற்கான செலவை பல மடங்கு குறைக்கிறது.
ஒரு முகநூல் பதிவிலிருந்து முன்னூறு பக்க புத்தகம் வரை எதைவேண்டுமானாலும் நீங்கள் மொழிபெயர்க்கலாம். ஒரு யூட்யூப் srt கோப்பாக இருக்கட்டும், மொபைல் செயலிகளாக இருக்கட்டும் - அவற்றையும் மொழிபெயர்க்கலாம். தமிழில் மட்டுமல்ல. 50க்கும் மேற்பட்ட மொழிகளில்.
தானியங்கு மொழிபெயர்ப்புப் பிரதிகளை நீங்களே திருத்தலாம், அல்லது பிற தொழில்முறை எடிட்டர்களைக் கொண்டு திருத்திக்கொள்ளலாம். எல்லோரும் ஐலேசாவுக்குள்ளேயே கிடைப்பார்கள்.
எனக்கு கடல் எப்போதும் பிடிக்கும். அதனால்தான் ஆழி பதிப்பகம் என்று பெயர் வைத்தேன். இப்போது மீனவர்களின் உழைப்புப் பாடல்களில் ஒலிக்கும் ஐலேசா ஐலேசா என்கிற ஒலியைத்தான் புதிய தொழில்நுட்பத்துக்கு இட்டிருக்கிறேன். அது ஆங்கிலத்தில் Ai இல் தொடங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.
நமது கடலில் நமது மீனவர்கள் ஐலேசா பாடும்போது அது அந்த கடும் உழைப்பின் சுமையை பலரும் பங்கேற்கும்படி பகிர்கிறது. அவர்களின் உடலியக்கத்தை இசைவிக்கிறது. அத்துடன் கடும் உழைப்பைக் கொண்டாட்டமாக மாற்றுகிறது. அதைப் போலவே ஐலேசா தொழில்நுட்பம், மொழிபெயர்ப்புச் செயல்பாட்டை கணிப்பொறிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கிறது. இருதரப்பும் இசைவாக செயல்பட்டு வேலையை முடிக்க உதவுகிறது.
இதோ ஐலேசாவைப் பற்றிய ஒரு அறிமுக வீடியோ.
இந்த வீடியாவைப் பாருங்கள். இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 162க்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக