ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

Petrol Diesel விலையேற்றத்தின் பக்கவிளைவுகள் பற்றி எந்த புரிதலும் இல்லாத மத்திய மாநில அரசுகள்

May be an illustration of standing
May be an image of text
Karthikeyan Fastura : · Petrol Diesel விலையேற்றத்தில் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி எந்த புரிதலும் இல்லாத அரசு தான் நமது மாநில அரசும் மத்திய அரசும். எங்கே வரி விதிக்கவேண்டுமோ அங்கே வரிச்சலுகையும், எங்கே வரிச்சலுகை கொடுக்க வேண்டுமோ அங்கே அளவுக்கதிகமாக வரிவிதிப்பும் செய்திருக்கிறார்கள். Corporate Tax 30% சதவீதத்தில் இருந்து 25% குறைத்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதில் கொஞ்சமாவது ஏற்றுவார்கள் என்று பார்த்தால் அதில் கையே வைக்கவில்லை. GSTல் வரிச்சலுகையும் இல்லை, வரி ஏற்றமும் இல்லை. இதில் ஏற்றி இருந்தால் கூட விலைவாசி ஏறாது. அல்லது இதில் நடக்கும் ஊழல்களை குறைத்தால் கூட வரிவருவாய் ஏறும்.
Dividend Distribution Tax விசயத்தில் இந்திய முதலீட்டை விட வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரி குறைவாக இருக்கிறது. கேட்டால் அப்போதான் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பார்கள்.
இதெல்லாம் போதாதென்று பெரிய பெரிய Corporate நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வார்கள்.
இதில் ஏற்படும் அத்தனை பொருளாதார பற்றாக்குறை சுமையையும் சாமானிய மக்களின் அன்றாட பொருட்களின், சேவைகளின் நகர்வுகளுக்கு பயன்படும் எரிபொருள்களான பெட்ரோல் டீசல் விலையில் கைவைப்பார்கள். அதுவும் எவ்வளவு? சுத்திகரிப்பட்ட பெட்ரோலின் விலை 32 மட்டுமே. இதற்கு அதிகபட்ச GSTயான 28%வைத்தால் கூட 41 மட்டுமே வரும். ஆனால் இதற்கு மட்டும் இன்னும் காலாவதியான VAT+Cess+Excise duty என்று மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து கிட்டத்தட்ட 190% வரியாக விதிக்கிறார்கள்.
இதில் பாதி மாநில அரசிற்கு சுளையாக செல்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசின் கலால்வரியை குறைக்கசொல்கிறது. மத்திய அரசு மாநில அரசு விதிக்கும் வரியை குறைக்க சொல்கிறது.
இதில் மாநில அரசின் பிரச்சனை என்னவென்றால் GST வந்த பிறகு மாநில அரசிற்கு கிடைக்கும் நிதியின் பங்கு குறைந்துவிட்டது. அதிலும் சமீபகாலத்தில் மாநில அரசின் GST பங்குத்தொகையை தராமல் இழுத்தடிக்கிறது. ஆகையால் மாநில அரசு பெட்ரோல் மீது ஏற்றியிருக்கும் வரியை குறைக்க மறுக்கிறது. மிகப்பெரிய வருவாய் இதன் மூலம் மட்டுமே நேரடியாக வருகிறது.
ஆக மாநில அரசும் தங்கள் பங்கிற்கு பங்கம் வரும்போதெல்லாம் வரியை ஏற்றுகிறார்களே ஒழிய இறக்க மறுக்கிறார்கள். இப்படித்தான் இன்று பெட்ரோல் விலை விண்ணைமுட்டிக்கொண்டு நிற்கிறது.
மாநில அரசிற்கு கொஞ்சம் மூளை இருக்குமானால் அவர்கள் இதில் குறைத்து வேறுவழிகளில் இதை Balance செய்யமுடியும்.
அரசின் வீண்செலவீனங்களை குறைப்பதன் மூலம் 10% வரை ஈடுகட்டமுடியும். உதாரணத்திற்கு எடப்பாடி அரசின் சாதனைகள் என்று முழுபக்க விளம்பரமாக தமிழ்நாட்டில் வரும் அனைத்து தினசரி பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுக்கும்காசை மிச்சபடுத்தினால் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க முடியும் இல்லையா..
பள்ளி, கல்லூரிகள் மூடியிருக்கும் இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு வேலை மிக மிக குறைவு. போக்குவரத்து உள்ளிட்ட பல செலவுகள் மிச்சமில்லையா.. கொரோனா காலம் முடியும் வரை பஞ்சப்படிகளை குறைப்பதன் மூலம் மிச்சபடுத்தலாம். அதை மக்களின் மீது சுமத்தப்படும் பெட்ரோல் வரியில் இருந்து குறைக்கலாம்.
ஆகாத, போகாத பொதுப்பணித்துறை Projectகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தாலே நிறைய மிச்சமாகும். உதாரணத்திற்கு மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல ஏற்கனவே மேலூர் வழியாக நான்குவழிச்சாலை இருக்க என்ன கருமத்திற்கு நத்தம் வழியாக ஒரு பறக்கும் நான்குவழிச்சாலை முழுக்க முழுக்க பாலத்தின் வழியாக மட்டுமே கட்டிக்கொண்டு அதற்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், சாலையில் இருந்த மரங்களை அழித்தும் செய்யவேண்டிய அவசியம் அவசரம் ஒன்றுமேயில்லை. அதே போலத்தான் சேலம் சென்னை நான்குவழிச்சாலையும். இந்த வீணாப்போன Projectகள் ஏற்றிவிட்ட செலவுகள் தான் மக்களின் தலையில் பெட்ரோல் விலையாக ஏறி இருக்கிறது.
முறைசாரா தொழில்களில் அனைத்திலும் லஞ்சம் விரித்தாடுகிறது. அவற்றிற்கு கண்காணிப்பை அதிகப்படுத்தி லஞ்சத்தை குறைத்து அந்த கண்காணிப்பிற்கு கட்டணமாக வசூலித்தாலே அரசிற்கு வருவாயாக பலமடங்கு திரும்பும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் மாநில அரசு செய்யக்கூடிய நடவடிக்கைகள். நமக்கு வாய்த்த அரசை பற்றி என்ன சொல்ல?
மத்திய அரசும் நல்ல அரசாக அமைந்தால் மிக மிக எளிதாக பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்தலாம்.. அதற்கெல்லாம் அறிவும் அறமும் இருக்கவேண்டும். அதீத சுயநலம் தனக்குத்தானே அழிவை கொடுக்கும் மிகப்பெரிய முட்டாள் தனம் என்பதை உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக