திங்கள், 8 பிப்ரவரி, 2021

ஒரே ஒரு நாள் Facebook ல இருந்து பாருங்க அப்ப புரியும் எங்க வலி என்னனு..???


செங்குட்டுவன் பொறியாளர்
: · பார்க்க பெரிய மனுஷன் போல இருக்கீங்க, எப்ப பாரு #Facebook லையே இருக்கிங்களே உங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா.. தம்பி புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது. ஒருநாள் நீ வந்து பாரு .. ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு.. எவ்வளவு  post
எவ்வளவு டென்ஷன்
எத்தனை லைக்
எத்தனை கமெண்ட்
எத்தனை ஷேர்
எத்தனை சண்டை
எத்தனை பஞ்சாயத்து
எத்தனை group call
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை கொஞ்சல்கள்
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ...
கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்,
திருமண நாள் வாழ்த்து சொல்லனும்,
அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்..
இது இல்லாமல் டிரெண்ட் னு வரும் வாரம் ஒரு வாட்டி..
அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்..
பெண்கள் தினம் குழந்தைகள் தினம்
காதலர் தினம் வரை வரும்
அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்..
அஞ்சாவது பப்ளிக் எக்ஸாம் வந்தாலும் நாங்க தான் நிறுத்தனும்
அண்டை நாட்டு  வைரஸ் வந்தாலும் நாங்கதான் உஷார் படுத்தனும்..
என்னா ச்சும்மான்னு நினைச்சிட்டுருக்க போல தம்பி நீங்க..
இது இல்லாம
புரபைல் பிக்சர் போட்டா ஹாஹாஹ ன்னு சிரிக்கறவங்களை கடக்கனும்..
இன்பாக்ஸ் தோழி கிட்ட
Good morning
Good afternoon
Good night
Saptya
Nalarkiya
Enna panra தினமும் கேட்கனும்..
அவங்க
மூஞ்சி சுமாரா இருந்தாலும்
Wow , nice , super , excellent, beautiful
வாய் கூசாம பொய் சொல்லனும்..
பெண்ணியம் பேசனும்
ஆணியம் பேசனும்....
எல்லா தோழிக்கும் friend request
கொடுக்கனும்..
கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க ..
அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்...
மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்....
இன்பாக்ஸ்ல ரொம்பவும்  வழியவும் கூடாது, அதுக்காக  இன்பாக்ஸ்ல பேசாம இருக்கவும் கூடாது....
முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் ....
எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு ...
தீக்குள்ள விரல விட்டா சுடும் சொல்றேன் உனக்கு புரியல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக