திங்கள், 8 பிப்ரவரி, 2021

பாலக்காடு அருகே தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

பாலக்காடு அருகே தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

maalaimalar :பாலக்காடு: பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 40). இவருடைய மனைவி சபிதா (38). இவர் அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இவர்ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் ஆமிலின் (6). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலையில் பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட சபிதா, தனது 3-வது மகனை கொலை செய்துவிட்டதாகவும், அவனுடைய உடல் குளியலறையில் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் உடனடியாக சபிதா வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் சபிதா அமர்ந்து இருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்கு போலீசார் சென்றபோது அங்கு சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான்.

உடனே போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சபிதாவை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவரே தனது மகனை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் கூறியதாவது:-

சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். அவருக்கு தெய்வதோஷம் இருப்பதாகவும், அதற்கு 3-வது மகனை நரபலி கொடுத்தால் அந்த தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாக கனவு வந்து உள்ளது.

எனவே அவர் தனது 3-வது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது 3-வது மகன் அருகே சென்றார். அப்போது அவன் தூங்கிக்கொண்டு இருந்தான். உடனே அவனுடைய கை மற்றும் காலை கட்டினார். பின்னர் அவன் சத்தம் போடுவதை தடுக்க வாயில் துணியை திணித்து உள்ளார்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்றார். பிறகு சமையல் செய்யும் கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று, மகன் என்றும் பாராமல் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகனின் கழுத்தை அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆமிலின் பரிதாபமாக இறந்தார். ஆனால் மகன் இறந்த மறு நிமிடத்தில் உயிரோடு வருவதாக கனவு அவருக்கு ஏற்கனவே வந்து இருந்தது. ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் இறந்த மகன் உயிரோடு வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனை கொன்றுவிட்டோமே என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான் அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து உள்ளார். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு யாராவது ஜோதிடம் சொன்னார்களா? அதை நம்பிதான் அவர் தனது மகனை கொன்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனக்கு தோஷம் நீங்குவதற்காக மகனை, பெற்ற தாயே நரபலி கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Rishvin Ismath : · தான் பெற்ற மகனை அல்லாஹ்வுக்காக என்று சொல்லி இப்ராஹீம் நபி வழியில் கொலையே செய்து விட்டார் மத்ரஸா ஆசிரியையான தாய் ஒருவர்

. ( இது குறித்த செய்திக்கு : http://www.puthiyathalaimurai.com/.../Woman-kills-6-year... ) இவரைக் கொலை செய்ய விடாமல் தடுக்க எந்த ஷைத்தானும் வரவில்லை, அதே போன்று மகனுக்குப் பதிலாக ஆட்டை கொலை செய்ய ஆட்டுடன் மலக்குகளும் வரவில்லை. . . .

 ஹஜ்ஜு என்பது ஒரு வணக்கமாக கருதப்படும் வரை, குர்பானி என்பது சிறந்த செயலாக சித்தரிக்கப்படும் வரை, இப்ராஹீம் மேற்கொண்ட கொலை முயற்சி தியாகம் என்று போற்றப்படும் வரை, தினமும் தொழுகையின் அத்தஹியாத்தில் இப்ராஹீம் புகழப்படும் வரை அல்லாஹ்வுக்காக கொலை செய்வது, குறிப்பாக தான் பெற்ற குழந்தையையே கொலை செய்வது ஞாபகமூட்டப் படுகின்றது. . 

கொலைகாரப் பின்னணி கொண்ட ஹஜ், குர்பானி ஆகியவற்றில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும். ஹஜ் என்பது காலத்திற்கு பொருத்தமில்லாத அநாகரீகமான, கொலைவெறியைக் கொண்டாடும் நிகழ்வாகும். இப்ராஹீம் புனிதர் அல்ல, பித்துப் பிடித்த கொலைகாரன் என்பதை சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். 

ஹஜ்ஜு மட்டுமல்ல, தினமும் தொழுகையின் அத்தஹியாத்தில் இப்ராஹீம் புகழ் பாடுவதையும் கைவிட வேண்டும். முஸ்லிம்கள் கொலைகார சமுதாயமாக, கொலையைக் கொண்டாடும் சமுதாயமாக, கொலைகாரனைப் புகழும் சமுதாயமாக இனியும் இருக்கக் கூடாது. பல்லாண்டுகளாக சிந்திக்காமல் செய்து விட்டீர்கள் என்பதற்காக தொடர்ந்தும் சிந்திக்கமலே இருப்பது பிழை.

இதே மாதிரியான ஒரு கோர சம்பவம் தொடர்பில் எழுதப்பட்ட பதிவு, முஸ்லிம்கள் கட்டாயம் வாசிக்கவும் : http://www.allahvin.com/2021/01/Mecca.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக