திங்கள், 15 பிப்ரவரி, 2021

Dr. ஷாலினி நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.

May be an image of 1 person
ஆலஞ்சியார் :· டாக்டர் ஷாலினி. மனநல மருத்துவர்.. மனித மனம் குறித்து அறிந்தளவிற்கு அரசியல் மற்றும் பொது சிந்தனை குறித்து அறிந்திருக்கவில்லை .. சமீபத்திய கருத்துகள் நிறைய விமர்சனங்களை தருகிறது .. எதிர்கருத்துகளை சொல்லவே கூடாதா என்றால் சொல்லலாம் கருத்தை எதிர்ப்பை பதிவு செய்வதற்கு முன் அதுகுறித்து முழுமையாக அறிந்திருக்கவேண்டும் . விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் வாயை திறக்கவில்லை என தயாநிதியை கேள்வி கேட்கிறார் .. எனது தொகுதி எனது பிரதிநிதி என் சார்பாக அவர்தானே கேட்கவேண்டும் என்கிறார்..
தன் எம்பியின் செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பது தவறில்லை ஆனால் கேள்வி கேட்கும் முன் அவர் பேசியிருக்கிறாரா என தெரிந்துக்கொண்டிருக்கலாம் .. எது குறித்தும் எவர் மீதும் விமர்சனம் செய்வதற்குமுன் குறைந்தபட்ச அதுகுறித்து அவர் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கேள்வி எழுப்பவேண்டும் ..
அவர் பேசினால் போதுமா மற்ற எம்பிகள் ஏன் பேசவில்லை என்கிறார் ..
நாடாளுமன்ற நடைமுறைகள் .. எந்தெந்த கட்சிக்கு எத்தனை மணிதுளிகள் தரப்படும் ..கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்ப்போல் நிமிடங்கள் ஒதுக்கபடும் .. திமுகவிற்கு ஒதுக்கபடும் நிமிடங்களுக்கு சில உறுப்பினர்கள் மட்டுமே பேசமுடியும் ..அதோடு பிற பிரச்சனைகள் குறித்தும், தங்கள் தொகுதிநலன் குறித்தும் மாநில நலன் இப்படி பல்வேறு விடயங்களை பேச வேண்டியிருக்கும் .. Dr. ஷாலினி
நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.
..
எடப்பாடி என விளிக்க கூடாது .. ஊர் பெயரை விளித்து கடுமையாக தாக்கினால் மனபிறழ் என்கிறார் .. பழநிசாமி என அழைத்து விமர்சனம் செய்யவேண்டும் என அதிமேதாவியைப் போல கருத்தை சொல்கிறார் ..
எடப்பாடி என்ற அடைமொழியோடு தான் பழநிசாமி அறியபடுகிறார் .. எங்க ஊரில கருப்பையா என்றொருவர் இருந்தார் .. கபிஸ்தலம் மூப்பனாரென அழைப்பார்கள் .. மெல்ல மெல்ல மூப்பனாரென்றே அழைக்கபட்டார் .. புகழும் போதும் இகழும் போதும்
அவரை மூப்பனாரென்றே அழைத்தார்கள் .. ஏன் சாதி பெயரை அழைத்து விமர்சனம் செய்கிறீர் என யாரும் கேட்கவில்லை யாரும் மூப்பனாரென அழைக்கிறீர்களே பைத்தியமா என கேட்கவுமில்லை காரணம் அது அவரது காரண பெயராக விளங்கியது .. கலைஞரை அன்போடு கலைஞரென அழைப்பதைபோல .. கலைஞர் எனச் சொன்னால் அது கருணாநிதியை தான் குறிக்கும் .. பிற கலைஞர்களை குறிக்காது .. எடப்பாடி பழநிசாமி என அறியபட்டவரை தகுதியற்ற தன்மானமிழந்து தமிழகத்தை சீர்கெடுத்தவரை விமர்சிக்கிற போது ஊர் பெயரை மட்டும் சொல்லாமல் அவர் பெயரையும் இணைத்து பேசவேண்டும் என்பதில் நமக்கு உடன்பாடுண்டு .. ஆனால் பொதுவாக பழநிசாமியை
எல்லோருமே எடப்பாடியென அழைப்பதால் ஏற்பட்டது அதற்காக பைத்தியங்கள் என்றழைப்பதெல்லாம் அரைவேக்காட்டுத்தனம் ..
..
இவர் விவசாய மசோதா நிறைவேற காரணமான அதிமுக எம்பிகளை விமர்சித்தாரா என்றால் இல்லை.. இந்த எடப்பாடி பழநிசாமியாவது சட்டமன்றத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினாரா .. ஏன் ஆதரவு தந்தீர்கள் என அதிமுக அடிமைகளை பார்த்து கேள்வி கேட்கதாதது ஏன் .. இவர்களுக்கு திமுகவை மட்டுமே கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் தெரியும் கருத்து சுதந்திரம்
திமுகவை கேள்வி கேட்பதில் மட்டுமே இவர்கள் நடுநிலை நிலைக்கும்..
சசிகலாவை சிறந்த ஆளுமையாக தெரிந்தவர்களுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா .. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்த கழகம் திமுக.. நாடாளுமன்றத்தில் இன்றளவும் திமுகவினர்கள் செயல்பாடுகள் மெச்ச தகுந்ததாகவும் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் அஞ்சாத கொண்ட கொள்கையை விட்டுகொடுக்காமல், நாட்டில் எந்த மூலையில் மக்களுக்கு விரோதமாக எதுநடந்தாலும் தட்டிகேட்க தயங்கியதில்லை ..
..
திமுக வரலாற்றை கொஞ்சம் படியுங்கள் ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக