திங்கள், 15 பிப்ரவரி, 2021

சசிகலாவை ஓரங்கட்டுவதில் வெற்றி பெறுகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

Image result for சசிகலா எடப்பாடி பழனிசாமி

.Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: பஞ்ச தந்திரங்களை கையில் எடுத்து, அதை நாசூக்காக வென்று முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி...
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு அஸ்திரமும், தனக்கு சாதகமான சூழலையே களத்தில் உருவாக்கி வருகிறது..!
"சசிகலா வருவதற்கு முன்பிருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவித பயம் வந்துவிட்டது.. அதனால்தான் ஜெயலலிதா நினைவிடத்தை, அவரது வருகையன்று அவசர அவசரமாக திறந்தார்,
பிறகு சென்னைக்கு சசிகலா வருவதாக தெரிந்ததுமே சூட்டோடு சூட்டோக உடனே மூடிவிட்டார். தன்னுடைய வேலூர் பிரச்சாரத்தையும் அன்றைய தினம் ரத்து செய்துவிட்டார்..
சசிகலா என்ற பேரையே தன் பேச்சில் எடுக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.. அமைச்சர்களை யாரும் சசிகலாபற்றி பேசக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்.. அப்படியே யாராவது நடந்து கொண்டாலும் அவர்களை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்...
இளவரசி, திவாகரன் சொத்துக்களை முடக்குகிறார்.. பல வகைகளில் நெருக்கடி தந்து கொண்டே இருக்கிறார்" என்ற பரபரப்பு பேச்சுக்கள் முதல்வரை வட்டமடித்து கொண்டே இருக்கின்றன

. சமயோஜிதமா? இது சசிகலா மீதான பயமா? சமயோஜிதமா? என்ற குழப்ப கேள்வியும் வலம் வருகிறது.. இறுதியில் இது சமயோஜிதம்தான் என்றும் அதில் எடப்பாடியார் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


நினைவிடம் சசிகலா வருவதற்கு முன்பு வரை திமுகவே குறி என்றிருந்தார் முதல்வர்.. இப்போது தினகரனுக்கும் சேர்த்து குறி வைப்பதால், அமமுகவின் இமேஜ் டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது என்பது முதல் விஷயம்.. நினைவிடத்தை மட்டும் அன்றைய தினம் திறந்து வைத்திருந்தால், இந்நேரம் சசிகலா அன்று ஒரே நாளில் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டிருப்பார், அதனால் தன் மீது என்ன குறையை சொன்னாலும், நினைவிடத்தை இழுத்து மூடியதால், முதல்நாளிலேயே சசிகலாவின் பிளானை எடப்பாடியாரால் நொறுக்க முடிந்தது 2வது வெற்றியாகும்.

சசிகலா தினகரனை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை குறி வைத்து பேசுவதால், சசிகலாவை தான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே முதல்வர் தன் பிரச்சாரத்தில் வெளிப்படுத்துவதாக தெரிகிறது..சசிகலாவால் தனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்தான் முதல்வர் அப்படி நடந்துகொள்கிறார் என்றும், தன்னை ஒரு தலைவராக மேம்படுத்தி கொள்ளும் வேலைகளிலேயே அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார் என்பதுமே புலப்படுகிறது.. சசிகலா பெயரை சொல்லாமலேயே இருந்து தனக்கு ஒரே எதிரி ஸ்டாலின் தான் என்பதையே எடப்பாடியாரின் பேச்சுக்கள் புரிய வைப்பதாக உள்ளது 3வது வெற்றியாகும்.

அதிமுக அதிமுகவும், அமமுகவும் இணைந்தால், திமுகவை சாய்த்து விடலாம் என்று டெல்லி மேலிடம் இவ்வளவு சொல்லியும் அதை எடப்பாடியார் ஏற்கனவே இல்லை.. தன்னையும், தன் மக்களையும், தன் ஆதரவாளர்களையும் இப்போதுவரை நம்பி கொண்டிருக்கிறார்.. அதற்காகவே சில அதிரடிகளையும் ஜெ. பாணியில் கையில் எடுத்துள்ளார்

பாமக தனக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் கிட்டத்தட்ட 100 எடுத்து கையில் வைத்திருக்கிறாராம்.. அந்த தொகுதிகள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி முதல் கரூர் வரையிலான இருக்கக்கூடிய தொகுதிகள் என்கிறார்கள்.. அதாவது வன்னியர் பெல்ட் நிறைந்தது.. எனவேதான், பாமக இவ்வளவு பிடிவாதம் காட்டியும் அவர்களிடம் பொறுமையாகவும், ஜாக்கிரதையாகவும் காய் நகர்த்தி கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.. இதுவும் எடப்பாடியாரின் 4வது வெற்றியாகவே கருதப்படுகிறது

வாக்கு வங்கி வடமாவட்டங்கள் இப்படி என்றால், தென் மாவட்டத்திலும் தனக்கான செல்வாக்கை பெற நினைக்கிறார்.. சசிகலாவின் வாக்குவங்கி அந்த பகுதியில்தான் நிறைந்திருக்கிறது.. அதனால் அங்கு ஏற்படும் பாதிப்பை ஆமைச்சர்கள் ஆர்பி உதயக்குமார், ஓபிஎஸ் போன்றவர்கள்தான் பார்த்து கொள்ளவேண்டும் என்பதே முதல்வரின் கணக்காக உள்ளது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை அந்த பகுதிகளில் முதல்வரின் தரப்பு குறைவான தொகுதிகள் ஜெயித்துவிட்டால், அமமுக கட்சி இயல்பாகவே தினகரன் தரப்புக்கு சென்றுவிடும். அதனால், அமமுக அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதும் ஒரு கணக்காக உள்ளது..

முத்தரையசர் சமூகம் இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. முத்தரையர் சமூக வாக்கு அவ்வளவாக தனக்கு கிடைக்காவிட்டாலும், நாடார், தேவேந்திர குல வேளாளர் போன்ற இதர சமூகத்தினரின் வாக்குகள் தனக்கு விழும் என்பது எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக உள்ளது.. அதற்காகவே மதுரையில் முத்தரையர் மாநாட்டில் காந்து கொண்டதும், செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததும்.. இதெல்லாம் முதல்வரின் 5-வது வெற்றியாகவே கருதப்படுகிறது..

ஜெ.பாணி இப்போதுகூட, விருப்ப மனு தாக்கலை முதல் கட்சியாக அதிமுகதான் அறிவித்துள்ளது.. பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதிக்குள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதெல்லாம் ஜெயலலிதா பாணி ஆகும்.. அவர்தான் மற்ற கட்சிகளைவிட முந்திக் கொண்டு விருப்ப மனு அறிவிப்பு செய்வார், வேட்பாளர் லிஸ்ட் அறிவிப்பார்.. உடனடியாக பிரச்சாரத்துக்கும் கிளம்பி சென்றுவிடுவார்.. அதே ரூட்டில்தான் எடப்பாடியாரும் சென்று கொண்டிருக்கிறார்.. அதனால், இந்த அனைத்து அதிரடிகளும், மீண்டும் அவரை முதல்வர் பதவியிலேயே தக்க வைக்க வழி வகுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக