செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

இலங்கை, நேபாளத்திலும் கிளைகள்.... சர்வதேச கட்சியாகிறதாம் பாஜக.... அமித்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர்

     theekkathir.in : அகர்தலா: பாஜக-வை இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் இலங்கையிலும் விரிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்லப் தேவ் குமார் என்றாலே எதையாவது உளறிக்கொட்டக் கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.“மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தன; சிவில் என்ஜீனியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுத வேண்டும்; குளத்தில் வாத்துக்கள் நீந்துவதால், தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்; டயானா ஹெய்டனுக்கு உலக அழகிப் பட்டம் கொடுத்திருக்கக் கூடாது” என்று எப்போதுமே ‘அறிவுப்பூர்வமாக’ பேசுபவர் பிப்லப் தேவ் குமார்.

இந்நிலையில்தான், அகர்தலாவில், ஞாயிற்றுக்கிழமையன்று, நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிப்லப் தேவ், “2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷாவை, தான் சந்தித்ததாகவும், அப்போது ‘நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளிலும் பாஜக-வைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்று அமித்ஷா தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.திரிபுரா முதல்வர் பிப்லப் தேவின் இந்தப் பேச்சும், வழக்கம்போல பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக