வியாழன், 11 பிப்ரவரி, 2021

கோவை முஸ்லீம் இளைஞரை திடீரென்று கத்தியால் குத்திய இந்து முன்னணியினர்.. கோவையில்

 Youth attacked by Hindu Munnani persons in Coimbatore
Hemavandhana - tamil.oneindia.com : கோவை: தோழியுடன் ஒருத்தர் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்.. அப்போது, திடீரென அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர், அவரை குத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.. அவர்களைதான் போலீசார் தேடி வருகிறார்கள். கோவை கோட்டைமேடு அருகே எஸ்எஸ் கோவில்வீதியை சேர்ந்தவர் முகமது முபாரக்... இவருடைய மகன் அகில் அகமது.. 27 வயதாகிறது.. எம்பிஏ படித்துள்ளார்.. இவர் பைக்குகள், கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்... இவர், ராமநாதபுரம் தன்வந்திரி கோவில் பக்கத்தில் தன்னுடைய தோழி ஒருவருடன் நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த, கார்த்திக், சஞ்சய் என்ற 2 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் திடீரென அகில் அகமதுவிடம் சென்று வம்பிழுத்தனர்.. எதுக்காக இந்த பெணணுடன் இங்கே நின்று பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டனர்.. இது வாக்குவாதமாக உருமாறியது.. தகராறாக முற்றியது.. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 பேரும், அகில் அகமதுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது... 
இதில் சஞ்சய் என்பவர் இரும்பு கம்பியால் அவரை தாக்கியதாக சொல்கிறார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் அகில் அகமது கீழே சரிந்து விழுந்தார்.. 
இதை பார்த்தஅந்த பெண் அப்படியே கதறி துடித்தார்.. உடனே அந்த 2 பேரும், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.. அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் ஓடிவந்து அகில் அகமதுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
அங்கு டாக்டர்கள் அகமதுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை ஆதம்பித்தனர்.. அகமதுவிடமும் விசாரித்தனர்.. சம்பந்தப்பட்ட கார்த்திக், சஞ்சய் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால் 2 பேரையும் காணோமாம்.. அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக