வியாழன், 11 பிப்ரவரி, 2021

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்!” - உதயநிதி ஸ்டாலின்!

nakkeeran :‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திண்டுக்கல் வருகை தந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் சீலப்பாடி பிரிவில், 40அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், திமுக கொடியை ஏற்றிவைத்து வேன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மீது மோடிக்குக் கோபம். இதன் காரணமாக, தமிழகத்திற்கு எதுவும் செய்து
 தரமறுக்கிறார்.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை, சர்க்கரை
போன்ற பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய  15,000 கோடி ஜிஎஸ்டி வரி பணத்தையும், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க மறுக்கிறார், 

காரணம் கேட்டால் நிதி நெருக்கடி எனக் கூறுகிறார்.
பிரதமர் மோடி. இதனைக் கேட்க
வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் தட்டிக் கேட்க
மறுக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், மோடி
சொன்னதால் தமிழகத்தில் நீட்தேர்வுக்கு அனுமதி அளித்தார், முதல்வர்
பழனிசாமி. இதன் காரணமாக கடந்த மூன்று வருடத்தில் 16 பேர் தற்கொலை
செய்துகொண்டன

 திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனக் கூறி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் 80 நாள் அடைத்து வைத்திருந்தனர். 'அம்மா இட்லி சாப்பிட்டார் என நான் போய் சொன்னேன், எங்களை சொல்லச் சொன்னார்கள்' என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார். அதிமுக ஆட்சி கேவலமான ஆட்சி என விமர்சித்தவர் சீனிவாசன். 'ஜெயலலிதா, டிடிவி தினகரன் கோடி கோடியாகப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள்' என சீனிவாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக