உலகிலே இப்படியாரும் நிலத்தின் அடையாளத்தை மாற்றமாட்டார்கள். அவர்கள் பொறுப்பிலே இருக்கட்டும். ஆனால் அது மெயிண்டெனஸ் மற்றும் உள் அரங்க விளம்பரங்களுக்கு மட்டுமே பொறுந்து. அந்த ஊரின் அடையாளத்தோடு ஒரு நிறுவனத்தின் பெயர் அடையாளத்தை சேர்க்கும் கேவலத்தை யாரும் செய்ததில்லை. ஆள வக்கற்ற ஒரு கும்பல், வர்ணாசிரம தர்மத்தை காப்பாற்ற துடிக்கும் கும்பல் எல்லா நிறுவனங்களையும் விற்கிறது. கேட்டால் நட்டத்தை தாங்க முடியவில்லை என்கிறது. சரி மூடர்களே லாபம் கொழிக்கும் நிறுவனங்களை ஏன் விற்கிறீர்கள் என்றால் ஒரு நிறுவனத்தை நடத்துவது அரசின் வேலையல்ல என்கிறது. அதன் தொடர்சியாகத்தான் இது.
அப்படியெனில் அரசின் வேலை என்ன ? கோவிலில் மணியாட்டுவதா ? இல்லை சாமியார்கள் காலையும், கார்ப்ரேட் காலையும் கழுவி குடிப்பதா ? மொத்தமாய் எத்தனை பொது நிறுவனங்கள் என தெரியாமல் நான் பிஎஸ்என்எல் போனேன் என்ன ஒரு மணி நேரம் நிக்க வச்சிட்டாங்கனு பொலம்பும் போக்கற்ற மூடர் கூடம் ஒரு பக்கம், இடஒதுக்கீடால்தானே நாடே நாசமா போச்சுனு என இந்திய அரசியல் வரலாறும் தெரியாத, அட தன் அப்பன் ஆத்தா எப்படி வாழ்ந்தாங்கனு தெரியாத ஒரு முட்டாள் கூட்டம். இந்த இரண்டையும் முன்னால் வைத்துக்கொண்டு பின்னால் நின்று ஆரியம் வேலை பார்க்கிறது. விரைவில் எல்லா ரயில் நிலையங்களும் இப்படி பெயர் மாறும். ஊர் அடையாளம் என வெற்றுப்பெறுமை பேசும் எந்த ஆண்ட பரம்பரையும் வாய் திறக்காது, எனெனில் அதன் வாயில் தான் வர்ணாசிரம் கால்கள் இருக்கிறதே, அடுத்து கோவில் நோக்கி நகர்வார்கள். அப்போது வாசலில் இருந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு நகரும் இந்த முட்டாள் கூட்டம். மூடர்களை ஆட்சியில் அமர்த்திய முட்டாள்களுக்கு தன் வீடு எரியும் போது தான் தெரியும். அதுவரை அது குளிர்காயும்.
பா. சரவண காந்த்.
உண்மை நண்பா
பதிலளிநீக்கு