செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

திமுக வெளிநடப்பு.. கவர்னர் உரைக்கு எதிர்ப்பு ! சட்ட மன்ற கூட்டத்தொரை புறக்கணித்து...

maalaimalar :கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.              கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை: 2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.                    ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, கவர்னர் உரையாற்றி வருகிறார். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக