வியாழன், 4 பிப்ரவரி, 2021

கொலைகார ஓம்சக்தியும் கொலை கலாச்சார ஊடகங்களும் ! மதுரை வஞ்சிமலர் கொலை!

May be an image of 1 person and text that says 'தாயின் தகாத உறவால் நேர்ந்த கொடூரம்..! அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன்..! Polimer NDI NEWS LINE DD MURDER'

மதுரையில் தனது தாயின் தலைமீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற மாணவன் பெயர் ஓம் சக்தி! இவனது தாய் தந்தை பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தாய் கூலி வேலை செய்து மகனை ( பிஎஸ்சி தகவல் தொழில் நுட்பம்) படிப்பிக்கிறார். இது மகன் ஓம்சக்திக்கு பிடிக்கவில்லையாம் அடிக்கடி இந்த உறவை விட்டு விடும் படி தகராறு பண்ணியிருக்கிறான்.
இறுதியில் ஒருநாள் இரவு நித்திரையில் இருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டான்.
அசல் தாலிபான் கலாச்சாரம் . அசல் சீரியல் கில்லர்களுக்கே உரிய கொடூரம்.
தாய் காதலிக்க கூடாது என்று இவனுக்கு யார் கற்று கொடுத்தது?
வாழ்நாள் முழுவதும் கூலி வேலை செய்து இவனுக்காகவே அவர் தனது வாழ்நாளை தண்டனையாக கழிக்கவேண்டும் என்று இவன் எப்படி கருதலாம்
இவனை விட மோசமான மனோநிலையில் உள்ளன சில ஊடகங்கள் .
இந்த செய்தியை கூறும் சில தரம் கெட்ட ஊடகங்கள் , தாயை கொன்ற மகன் என்பதற்கு பதிலாக , தகாத உறவில் இருந்த தாயை கொன்ற மாணவன் என்று செய்தியை வெளியிட்டு உள்ளன .
எவ்வளவு மோசமான தாலிபான் யுகத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம்?
இந்துத்வா மட்டுமல்ல இந்த விடயத்தில் தமிழ் தேசிய கலாச்சார காவலர்களும் இப்படிப்பட்ட தாலிபான்களாகதான் தற்போது உருமாறி கொண்டு வருகிறார்கள்
இந்த மனித நாகரிக சீரழிவுக்கு பல திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன..
இப்போதும் இது போன்ற சீரழிவுகளைதான் தமிழ் திரைப்படங்கள் பெரிதும் வளர்க்கின்றன
G Shanmugakani : பெண்ணின் கற்பை அவள் யோனியில் வைத்த கயவர்களைத்தான் காரி உமிழவேண்டும். அப்பெண்மணி கணவன் இறந்த பின்புதான் ஒரு ஆடவனைக் காதலித்திருக்கிறார். அதில் தவறென்ன இருக்கிறது? பெண் இறந்து ஆண் வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் அதை இச்சமூகம் அங்கீகரிக்கிறது. இந்நிலை எப்போது மாறும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக