ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கமல் ரஜனி சந்திப்பு ! பேசிய அரசியல் என்ன? ஜீவ சகாப்தன் அதிரடி

3-வது அணி உருவாக வாய்ப்பு: கமல் ஹாசன்

கமல் ஹாசன்
மாலைமலர் : சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 3-அணி அமைய வாய்ப்பு. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன.    திமுக-வில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தூது வருவதை கருத்தில் கொள்ள முடியாது. தலைமை மட்டத்தில் இருந்து வந்தால்தான் உறுதி.
* நல்ல விசயங்கள் எங்கு இருந்தாலும் தேடி எடுத்துக் கொள்வோம்.
* தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்
*  நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும். கதவுகள் திறந்தே உள்ளன.
*  ரஜினியுடன் நலம் விசாரித்ததோடு சரி. அரசியல் குறித்து அவரிடம் ஏதும் பேசவில்லை. வாய்ஸ் கொடுக்க நினைத்தால், ரஜினிதான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல. கூட்டணிக்குத்தான் பேச்சுவார்த்தை தேவை..    இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக