சனி, 20 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டில் நட்டநடுநிலை, நடு சென்டர்களின் அட்டகாசம்!!!

Kandasamy Mariyappan : · தமிழ்நாட்டில் நட்ட நடுநிலைகள், நடு சென்டர்களுடன் விவாதித்தால்...
திமுக, குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை; கமிஷன் பார்ப்பதற்கு!!!
திமுக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை: கமிஷன் அடிப்பதற்கு!!! திமுக, நில உச்சவரம்பு மூலமாக குத்தகைதாரர்களுக்கே நிலங்களை பட்டா போட்டு கொடுத்தது,
நட்ட நடுநிலை: சொந்த கட்சிக்காரங்களுக்கு எங்கள் நிலத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்!!!
திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நத்தம் புறம்போக்கு இடத்தில் வாழ்ந்த குடியானவர்கள்களுக்கும் அதே இடத்திற்கு வீட்டுமனை பட்டா கொடுத்தது,
நட்ட நடுநிலை: பொறம்போக்கு இடத்தை கட்சிக்காரங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டார்கள்!!!
திமுக, பேருந்துகள் அரசுடைமையாக்கி எல்லா கிராமங்களுக்கும் பேருந்து பேருந்து போக வழி செய்தனர்,
நட்ட நடுநிலை: பார்ப்பனர் மீது கொண்ட பொறாமையால் அவர்களிடம் இருந்த பேருந்துகளை பறித்துக் கொண்டார் கலைஞர்!!!
திமுக பத்துக்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கியது,
நட்ட நடுநிலை: குழாய் புதைக்க, மோட்டார் அமைக்க காண்ட்ராக்ட் விட்டு நல்ல சம்பாதித்தது!!!
திமுக மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியது,
நட்ட நடுநிலை: கொள்ளை அடிப்பதற்காக போட்ட திட்டங்கள்!!!
திமுக ஏறத்தாழ 7500 ஆரம்பப் பள்ளிகளை உருவாக்கியது,
நட்ட நடுநிலை: கட்டிடம் கட்டியதில், வேலை போடுவதில் ஊழல் செய்வதற்கு!!!
திமுக, போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் அமைத்தது,
நட்ட நடு நிலை: திமுகவினர் நடத்தும் சிமெண்ட் ஆலை, இரும்பு வியாபாரம் செழிக்க, அதன் மூலமாக கொள்ளையடிக்க போட்டது!!!
திமுக, எல்லோரும் வேகமாக பயணிக்க தமிழ்நாடு முழுக்க நான்கு வழிச் சாலை அமைத்தது,
நட்டநடுநிலை: அதுக்கப்புறம்தான் TR Balu கொள்ளையடித்து கட்டு கட்டா பணத்த கடலுக்குள்ள வச்சிருக்கார்!!!
திமுக, சமத்துவபுரம் கட்டினாங்க,
நட்ட நடு நிலை: அந்த வீட்டோட தரத்தை பாத்தியா, அங்கே உள்ள ஒன்றியம் சம்பாதிக்க போட்ட திட்டம்!!!
திமுக, கிராமங்களுக்கு மினி பஸ் வசதி செய்து கொடுத்தது,
நட்ட நடுநிலை: எல்லாம் கட்சிக்காரங்களுக்காக!!!
திமுக, சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலமாக BE அட்மிஷன் போட்டது,
நட்ட நடுநிலை: கட்சிக்காரர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு பசங்கள அனுப்பி வருமானம் தேடிக்கிட்டாங்க!!!
இவ்வளவுதாங்க, தமிழ்நாட்டு அரசியல்!!!
சரி, அதிமுக இவ்வளவு கொள்ளை அடிக்கிறார்களே, அதிமுக தமிழ் நாட்டை அடகு வச்சுட்டாங்களே, எதுவுமே தரமில்லாமல் இருக்கே,
நட்ட நடுநிலை: இதுக்குத்தான் இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று சொல்லுகிறோம்!!!
தமிழ்நாட்டில் நட்டநடுநிலை, நடு சென்டர்களின் அட்டகாசம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக