வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

நடிகர் திலகத்துக்கு வாய்த்த பாஜக ராம்குமார்

May be an image of A Somasundaran and standing
மறைந்தும் மறையாத மாபெரும் நடிக மேதை சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பாஜகவில் சேர்ந்திருக்கிறார் . பராசக்தி கணேசனின் கதை உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்து இருக்கிறது.. சாதாரண மக்களின் நாவில் நல்ல தமிழை கொண்டு சென்றதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பங்கு சாதாரணமானது அல்ல. சொந்த வாழ்வில் மிகவும் கௌரவமாக வாழ்ந்தவர். இவரின் பேத்தியின் திருமணம் இவருக்கு ஒரு சாபம் போல அமைந்து விட்டது என்று தோன்றுகிறது . இவரின் சொல்லை மீறி இவரது குடும்பத்தினர் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு திருட்டு குடும்பத்திற்கு இவரை சம்பந்தி ஆக்கியது.
அந்த சுதாகரன் மகாலக்ஷ்மியின் வரலாற்று திருமணத்தில் தங்கம் வைரமும் பட்டும் பீதாம்பரமாக ஷோ காட்டிய வேளையில் வெறும் கதர் சட்டையோடு காட்சி அளித்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லியவர் இந்த காமராஜரின் அன்பர்.
பின்பு ஜெயலலிதாவின் பணத்தை கையாடல் பண்ணியதாக சுதாகரனை ஜெயிலில் போட்டார் ஜெயலலிதா.
சிவாஜி நேரில் வேண்டுகோள் விடுத்தால் ஜெயா அவனை விட்டுவிட கூடும் என்று குடும்பத்தினர் சிவாஜியை துன்புறுத்தியதாக செய்திகள் வந்தன .
அதை அடியோடு மறுத்து தனக்குள்ளேயே குறுகிப்போனார் அந்த சிம்ம குரலோன் . 
இது பற்றிய செய்திகள் பலவிதமாக அப்போது பத்திரிகைகளில் வந்தன .
இந்த கவலையில் சிவாஜி அவர்கள் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டார் .
டயாலிசிஸ் செய்ய மறுத்துவிட்டார் .
சரியாக மருந்துகள் உண்பதிலும் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை என்று கூட செய்திகளை வந்தன .
ஒருவரின் இறப்பு என்பது கண்ணுக்கு தெரியாத தற்கொலையாக இருக்கவும் வாய்ப்புள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக