செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

உலகின் முதல் இசைக் கல்வெட்டு - தமிழ்க் கல்வெட்டு- அறச்சலூர் இசைக்கல்வெட்டு!

No photo description available.
Kuganathan VE : · உலகின் முதல் இசைக் கல்வெட்டு - தமிழ்க் கல்வெட்டு- அறச்சலூர் இசைக்கல்வெட்டு:::: உலகின் முதல் இசைக் கல்வெட்டு எது என்று தெரியுமா? வரலாற்றில் ஆர்வமுடையோர்கள் சுமேரியக் களிமண்ணில் செய்யப்பட்ட `Lipit-Ishtar` தொடர்பான, 4000 ஆண்டுகளிற்கு முற்பட்ட சான்றினைக் கூறலாம் (Tunings for a hymn honoring the ruler Lipit-Ishtar). இரு காரணங்களிற்காக இதனை முழு இசைக் கல்வெட்டாக ஏற்கமுடியவில்லை. 1. இது ஒரு Tune (ஒத்திசைவி) ஆகக் கொள்ளப்படுகின்றதே தவிர Music (இசை) ஆகவல்ல. ஒத்திசைவி என்பது இசையின் ஒரு குறுகிய வடிவமே (A "tune" to be a short section of music, usually containing harmony and possibly multiple melodies)
No photo description available.
2. சுமேரிய மொழி இன்னமும் முழுமையாகப் படித்தறிய முடியாத மொழி. மேலும் இன்று வழக்கிலில்லாத மொழி.
அடுத்தாதகச் சொல்லப்படும் “ Hurrian Hymn No. 6” என்பதும் ஒரு மெட்டு வடிவமே (Melody) , முழு இசையல்ல.
முழு இசை வடிவத்திலான சான்றாக (First ever music composition) கிரேக்கத்தினைச் சேர்ந்த “Seikilos Epitaph” என்பது குறிப்பிடப்படுகின்றது. இதன் காலம் (CE 2nd cent) பொது ஆண்டு 2ம் நூற்றாண்டாகும். இதே காலப்பகுதியைச் (CE 2nd cent ) சேர்ந்த இசைக் கல்வெட்டு தமிழிலுமுண்டு. அதுதான் அறச்சலூர்_இசைக்கல்வெட்டு.
அறச்சலூர் இசைக்கல்வெட்டு என்பது , ஈரோடு மாவட்டம் அறச்சலூர் என்னும் ஊரில் உள்ள நாகமலைக் குன்றில் பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டில் (CE 2nd cent) எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றது. இக் கல்வெட்டில் பின்வரும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
👇👇👇
பறை, உடுக்கை, கறடிகை, காளம், காகளம், காசை, குடமுழா, குழல், கொட்டிமத்தளம், சகடை, சங்கு, செண்டை, சேகண்டிகை, சேமக்கலம், டமருகம், தட்டழி, தவில், தாரணி படகம், தாளம், திருச்சின்னம், திமிலை, நகரா, பஞ்சமுறை, பாரி நாயனம், மல்லாரி, மணி, முகராசு, மேளம், யாழ், வங்கியம், வீரமத்தளம்.
👆👆👆
அதன் அருகில் இரண்டு தொகுதிகளாக  அடவு எனப்படும் இசை, தாள எழுத்துகள் ஐந்து ஐந்து வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
வரி 1 :::: த தை தா தை த
வரி 2:::: தை தா தே தா தை
வரி 3::::: தா தே தை தே தா
வரி 4:::: தை தா தே தா தை
வரி 5:::::: த தை தா தை த
👆இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக எப்படிப் படித்தாலும் ஒன்றுபோல் அமைந்துள்ளதைக் காணலாம். இவை 1800 ஆண்டுகட்கு முன்னால்  மணியன் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவரால் பொறிக்கப்பட்டதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இவரது பெயரிலுள்ள `எழுத்தும் புணருத்தான்` என்ற பெயரினை சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறும் ‘எழுத்துப் புணர்ப்பு’ என்ற தொடருடன் தொடர்புபடுத்தியும் பார்க்கலாம் {சிலப்பதிகாரமும், இக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலமும் சமமானவை}.
👉தமிழர்களின் இசை வரலாற்றினை CE 7th cent / 7ம் நூற்றாண்டு காலத்தினைச் சேர்ந்த குடுமியான்மலை  இசைக் கல்வெட்டு ம் முதன்மையானது. இக்கல்வெட்டு பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் {CE 7th cent} காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
👆👉👉இவ்வாறு இசையிற்கான முழுவடிவக் கல்வெட்டினை (அறச்சலூர்_இசைக்கல்வெட்டு ) உலகிலேயே முதன் முதலில் கொண்டிருந்த தமிழர்களிடம் இன்று சொந்தமாக ஒரு இசை வடிவம் எவ்வாறு இல்லாமற்போனது?. பக்தி இயக்க காலத்தில் தமிழரின் இசை முழுக்க முழுக்க சமய மயமாகியது. அப்போது வாழ்வியல் சார்ந்த இசை வடிவம் மாறத் தொடங்கியிருந்தது. என்றபோதிலும், தமிழிசை தன்னைத் தொலைத்தது 13 ம் நூற்றாண்டிலேயே. 13ம் நூற்றாண்டு இசை நூலான சாரங்கதேவரின் `சங்கீத இரத்தினாகாரம் ` என்ற சமற்கிரத நூலிற்குள் எல்லாம் உள்வாங்கப்பட்டு, மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்போதைய மன்னர்களின் இசைவுடனும், மக்களின் பக்தி எனும் அறியாமையுடனும்  தமிழிசைக்_கொலை நடந்தேறியது.
🙏தமிழ் வழிபாட்டினை மீட்டெடுப்பதனைவிட தமிழ் இசை, தமிழ் நடனம் என்பவற்றை மீட்டெடுப்பது முதன்மையானவை. செய்வோமா!🙏🙏🙏
குறிப்புகள் 1. படம் 1 இல் அறச்சலூர்_இசைக்கல்வெட்டின் ஒரு பகுதி {படிப்பதற்காக வெண் சாந்து பூசப்பட்டுள்ளது}.
2.கல்வெட்டு இருக்குமிடத்திற்கான அறிவித்தற் பலகை (பிற்கால இந்த அறிவித்தற் பலகையினையின் கோலத்தினைப் பார்த்தால், தமிழர்களின் தொல்லியல் அக்கறையினைப் புரிந்துகொள்ளலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக