செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை: மத்திய அரசுத் திட்டம்!

May be a Twitter screenshot of 1 person and text that says 'Srivatsa @srivatsayb Market Cap In 2014 ONGC: ₹3,60,000 cr RELIANCE: 60,000 cr Market Cap In 2020 ONGC:₹1 20,000, cr RELIANCE: ₹16,00,000 cr ONGC's Worth has fallen by 1/3rd while Reliance has increased 7x But if you question such things, #AmbaniJivi will call you #AndolanJivi 5:48 PM 09 Feb 21. Twitter for Android'
minnambalam : வேலைநாட்கள் தொடர்பாக வரும் நாட்களில் மத்திய அரசு புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது அலுவலகங்களில் தினமும் 8 மணிநேரம் என்ற அடிப்படையில் வாரத்திற்கு ஆறு நாட்கள் அதாவது 48 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா காலகட்டத்தில், வீடுகளிலிருந்தே பணி புரிய அனுமதிக்கப்பட்டதால் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டது. நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்தது. இந்நிலையில் ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களைக் கொண்டுவர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இனி வரும் நாட்களில் வாரத்துக்கு நான்கு நாள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற புதிய விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா கூறுகையில், "வாரத்தில் 48 மணி நேரம் வேலை என்ற நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வேலை நாட்களில் மாற்றங்கள் செய்யப் பேசப்பட்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 12 மணி நேரம் என்ற வீதத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 5 நாட்களும், 8 மணி நேரம் வேலை செய்தால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறிவரும் பணிச் சூழலுக்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் மூலம் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையை வழங்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

- பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக