திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்: அவரது 3 மாத குழந்தையை தீயில் தூக்கி வீசிய கொடூரன்.. பீகாரில்

.tribuneindia.com :Muzaffarpur, January 31 A man allegedly threw a three-month-old baby girl into a fire in Bihar’s Muzaffarpur district on Sunday after her mother protested against his sexual advances, police said. The baby received severe burn injuries in her legs and she is being treated at the Sadar Hospital, they said. The incident took place in the Bochahan police station area when the woman was sitting outside her home near a bonfire, police said. 

maalaimalar.com : பீகாரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் 3 மாத குழந்தையை தீயில் தூக்கி விசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் போச்சஹான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பெண் ஒருவர் தனது 3 மாத பெண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியில் இருந்துள்ளார். குளிர் காலம் என்பதால் தீ மூட்டி அதன் அருகில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணின் அருகில் ஒருவர் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் தொட்டுள்ளார். தொடர்ந்து அவ்வாறு செய்ய அந்த பெண் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த நபர், பெண்ணின் 3 மாத குழந்தையை பறித்து தீயில் தூக்கி வீசியுள்ளார். அதில் அந்த பெண் குழந்தையின் இரண்டு கால்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. அக்குழந்தை சர்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண் ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவரது குழந்தையை தீயில் தூக்கி வீசிய சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக