கடந்த நான்கு ஆண்டுகளில் கடவுள் இல்லை என்பன போன்ற நான் எழுதிய பதிவுகள் 0.1% தான் இருக்கும். மற்றவை அனைத்தும் மனிதம் சார்ந்துதான். பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அந்த மனிதத்தை தான். அதனால் தான் இன்றும் என் பாட்டி என் நெற்றியில் திருநீர் வைத்தால் அதை அளிப்பதில்லை. அதை அணிவதினால் எப்படி எந்த பலனும் இல்லையோ, அதை அழிப்பதினாலும் எந்த பலனும் இல்லை, என் பாட்டியின் மனது புண்படுவதை தவிர.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடுத்த கேள்வி 'அதென்ன பார்ப்பனர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருப்பது'. இந்த கேள்வியை நான் அதிகம் எதிர்கொண்டதில்லை என்றாலும் பெரியார் என்றால் பார்ப்பன எதிர்ப்பு தான் பிரதானம் என்பது பலரின் கருத்து. அது ஓரளவிற்கு உண்மையும் கூட. நான் எப்படி பெரியாரியவாதி என்பதால் மேற்கொண்ட விமர்சனங்களை எதிக்கொள்கிறேனோ அது போல் பார்ப்பனர்களும் தங்களை பார்ப்பனார்களாக நிலைநிறுத்தி கொள்ளும் போது பார்ப்பன விமர்சனத்தை தவிர்க்க முடிவதில்லை.
உங்கள் நெருங்கிய நண்பர்களை தவிர மற்ற நண்பர்களில் எத்தனை பேரின் ஜாதி உங்களுக்கு தெரியும்? இப்போது அவர்களில் பார்ப்பனர்களை மட்டும் சுட்டிக்காட்ட சொன்னால், சுலபமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் பார்ப்பனர் என்பதை எப்படியாவது நமக்கு உணர்த்தி விடுவார்கள். பள்ளியில் இருந்து இப்போது வரை. இப்போது என்றால் இந்தியாவை தாண்டியும்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 பேர் சம்மந்தமே இல்லாமல் தாங்கள் பார்ப்பன வம்சாவளி என்பதை நேரடியாக, நான் கேட்காத போதும் சொல்லிக் கொண்டவர்கள்.மூவரும் பெண்கள். ' எங்க அம்மா ஸ்ரீலங்கன், எங்க அப்பா Indian Brahmin' ' My father is from Maharashtra and my mother is a brahmin from Chennai'. இதில் ஒரு ஆஸ்திரேலியா ஆணும் (இந்திய வம்சாவளி அல்லாதவர் ) 'ஒருமுறை இந்தியா சென்ற போது ஒரு பெண்ணை காதலித்தேன். அவரின் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து கொடுக்க ஒத்துக்கொள்ளவில்லை ' என்றார். ' ஏன், நீங்கள் வெளிநாடவர் என்றா?' என்று கேட்டதற்கு ' No, they are brahmins' என்றார். அவரிடம் செட்டியார், நாயுடு, கவுண்டர் இவர்களை சந்தித்ததுண்டா என்று கேட்டால் குழம்பி போவார். ஏனென்றால் இவர்கள் யாரும் நாங்கள் இந்த ஜாதியை சார்ந்தவர்கள் என்று எந்த ஒரு வெளிநாடவரிடத்தும் சொல்வதில்லை.
வெளிநாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம். எந்த ஒரு முற்போற்கான பார்ப்பனருக்கும், தான் ஒரு பார்ப்பனர் என்பதில் எப்போதும் பெருமை உண்டு. கமலஹாசன் முதல் இரண்டாம் தலைமுறை ஆஸ்திரேலிய brahmins வரை.
இப்போதைய நிலையில் ' நான் ஒரு பார்ப்பனர்' என்று ஆஸ்திரேலியாவில் இல்லை தமிழ்நாட்டில் சொன்னால் கூட, மக்கள் ' இருந்துட்டு போ ' என்று சொல்வது பெரியாரியம் இல்லாமல் வேறு என்ன
அருமை
பதிலளிநீக்கு