செவ்வாய், 26 ஜனவரி, 2021

சசிகலா நாளை விடுதலை - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு

சசிகலா நாளை விடுதலை ஆகிறார் - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு
maalaimalar : விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை (புதன்கிழமை) விடுதலையாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
சசிகலா

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. 

ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்துவிட்டு பார்த்தால், அவர் ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தொகையை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக