சனி, 2 ஜனவரி, 2021

மாரிதாஸ் அரசியலில் இருந்து விலகுகிறாராம்

Velmurugan Balasubramanian
: · அரசியலில் இருந்து விலகுகிறேன் - மாரிதாஸ் திமுகவை வேரறுப்போம் என்று சொன்னவர் பட்டியலில் மற்றுமொருவர் தற்போது விடைபெறுகிறேன் என்று ஒதுங்குகிறார். மாரிதாஸ் விதைத்த நஞ்சு கொஞ்சமல்ல. தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் கூட்டியும் காட்டியும் கொடுக்கும் வேலையை கடந்த 4 வருடங்களாக செய்து வந்தார். போராடிய விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றார்
போராடிய மாணவர்களை தீவிரவாதிகள் என்றார்
போராடிய அரசு ஊழியர்களை ஊழல்வாதிகள் என்றார்
கம்யூனிஸ்டுகளை சீனக் கைக்கூலிகள் என்றார்.
முஸ்லீம்களை பாகிஸ்தான் ஏஜெண்ட்டுகள் என்றார்
பெரியாரிஸ்டுகளை கிருத்தவ கைக்கூலிகள் என்றார்.
குணசேகரன்களையும், செந்தில்குமார்களையும் திமுகவின் ஏஜென்டுகள் என்றார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் வேலைவாய்ப்பு உயரும் என்றார்.
மீத்தேன் எடுப்பதால் பொருளாதாரம் வளரும் என்றார்.
நீட் தேர்வினால் ஏழைகள் மருத்துவம் படிக்க முடியும் என்றார்
அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்றார்.
இப்படி அப்பட்டமான பொய்களை புள்ளிவிவரங்கள் என்ற போர்வையில் தினம் தினம் பரப்பியவர்.
தேர்தலுக்கு முன்பே இவர் விலகுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை அவர் உணர்ந்து விட்டார். கலைஞர் போல "மன்னிப்போம்  மறப்போம்"என்ற வகையறா அல்ல ஸ்டாலின் என்பதையும் அவர் உணர்ந்து விட்டார்.
கடைசி வரை எதிர்த்து வந்தால் காணாமல் போகிவிடுவோம் என்பதால் இடையிலேயே விலகுகிறார்.
மாரிதாஸை மக்கள் மன்னிப்பார்களா என்பது ஆட்சி மாறும் போது தெரியவரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக