திங்கள், 11 ஜனவரி, 2021

சசிகலா - தினகரன் குழுமத்தின் சொத்துக்களும் ஊழல் வழக்குகளும் பட்டியல்

Image may contain: 2 people, text that says 'திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! PIARE கடനി மன்னார்குடியிலிருந்து மாச சம்பளத்துக்கு போயஸ்தோட்ட வீட்டு வேலைக்கு வந்த எச்சக்கலை பய நீ... உனக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்துச்சி...'
Nanthivarman : தலைவர் தளபதியாரை விமர்சித்து திரியும் திருட்டு தினகரனின் மீதான ஊழல் வழக்குகளின் பட்டியல்.. 1991-95 ஒரு கோடியே லட்சம் டாலர் ($10,493,313) மற்றும் நாற்பத்தி நான்கு லட்சம் பவுண்ட் (€44,37,242.90) அளவிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 27/1996) வழக்கு,
● 1994-95ல் நான்கு லட்சம் டாலர் ($477,760) மதிப்பிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 81/2001) வழக்கு
● அதே காலகட்டத்தில் $90,000 டாலர் மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 82/2001) வழக்கு
● பத்து லட்சம் டாலர் ($1,000,000) மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 83/2001) வழக்கு
● மேலும் 36 லட்சம் டாலர் ($3,636,000) மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் (€1,00,000) மதிப்பிலான மற்றுமொரு வழக்கு
● இவையெல்லாம் போக,லண்டன் ஹோட்டல் வழக்கு மூலம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐந்தாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்
இதில் மேற்குறிப்பிட்ட முதல் வழக்கை எடுத்துக்கொண்டால்,அமெரிக்கா அருகிலுள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்ற கண்காணாத தேசத்தில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Dipper Investments) என்ற பெயரில் 90-களில் ஒரு நிறுவனம் நடத்திவந்த தினகரன்,அதற்கு இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் (Barclays Bank) இருந்து,ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்கிறார். இது அந்நியச் செலவாணி முறைப்படுத்துதல் சட்டம் (FERA Act) பிரிவு 8(1)-ன் படி குற்றம்.மேலும் மீர் (Meer),கேர் அண்ட் தேசாய் (Care and Desai) என்ற நிறுவனங்களுக்கு 43 லட்சம் பவுண்ட், வெஸ்ட்பேக் லிமிடட் (Westback Ltd) நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் பவுண்ட், அயர்லாந்தில் உள்ள மற்றொரு வங்கிக்கு 23 ஆயிரம் பவுண்ட் என மொத்தம் 44 லட்சம் பவுண்ட் அளவிற்கு முறைகேடாக பண பரிவர்த்தனை மேற்கொண்டார்.
இந்த முறைகேட்டிற்காக FERA சட்டப்பிரிவுகள் 8(1),9(1)(a) மற்றும் 14-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 2,1995 அன்று கைது செய்யப்பட்டார்.அந்த கைதும் கூட,சாதாரணமாக இல்லை.
கடந்த மாதம் சசிகலா அவர்கள் சிறை செல்லும்போது எப்படி சொகுசுககார்கள் புடை சூழ பிக்னிக் போவது போல பெங்களூர் சென்றாரோ,அதுபோலவே திரு.தினகரனும் நான்கைந்து மாத அலைக்கழிப்பிற்குப் பிறகு பெரும் தொண்டர் படையுடன் சென்று சரணடைந்தார்.
அந்த 22 வருட வழக்கில் தான் அவருக்கு சமீபத்தில் ரூ.25 கோடி அபராதம் (ரூ.31 கோடி அபராதத்தில் ஆரம்பித்தது) விதிக்கப்பட்டது.இந்த வழக்கின் சுவாரசியமான விசாரணை,தினகரனின் தில்லாலங்கடி பற்றியெல்லாம் பார்க்கும் முன் மற்றுமொரு விசித்திரமான வழக்கு பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அதுதான்,சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரன் இருந்த கதை.
தினகரன் மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாய் வெளிவர,வெளிநாடுகளில் அவர் வாங்கியிருந்த சொத்துக்கள் பற்றிய கணக்கீடு எடுத்தபோது சிக்கியது,தினகரன் பெயரில் இருந்த ஸ்லாலி ஹால் (Slaley Hall) மாபெரும் சொகுசு ஹோட்டல்.ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பிரசித்திபெற்ற ஹோட்டல்,அன்றைய மதிப்பிலேயே சுமார் ரூ.280 கோடி.அதன் உரிமையாளராக இருந்தார் தினகரன் என்பது விசாரணை அதிகாரிகளையே மிரள வைத்தது.
பின்னர்,இதில் ஜெயலலிதாவும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவர, ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவும் சேர்க்கப்பட்டு,ஐந்தாவது குற்றவாளியாக தினகரனும் சேர்க்கப்பட்டார்.ஆனால்,இதன் மீதான சாட்சி்கள் யாவும் வெளிநாடுகளில் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிக்கப்படலாம் என்ற ஒரே காரணத்திற்காக,கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் திரு.ஆச்சாரியாவால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது இரட்டை இலை சின்னத்திற்காக 89 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கு வேறு இந்த லட்சணத்துலதான் இந்த நாயி உத்தமன் வேஷம்போட்டு தலைவரை விமர்சனம் பண்ணிட்டு திரியுது.!
#திருட்டு_தினகரன்.
#திருட்டு420டோக்கன்_தினகரன்
Nanthivarman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக