திங்கள், 11 ஜனவரி, 2021

வாரா கடன் வட்டி தள்ளுபடி , அசல் தொகையில் 80 முதல் 90 % வரை தள்ளுபடி.. ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன்

Maha Laxmi : · மிக அவசரம், உங்களுக்கு பயனில்லை எனில் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன் வாங்கி நீண்ட காலமாக கட்டமுடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான நற்செய்தி. ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தாமல் உள்ள வாரா கடன்களுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி, அதோடு மிக முக்கியமாக இப்போ இருக்கிற அசல் தொகையில் 80 முதல் 90 % வரை தள்ளுபடி. இந்த திட்டத்தோட பெயர் ரின் சமாதானம். இது இந்தமாதம் 31 ஜனவரி 2021 வரை மட்டுமே.
ஒருத்தர் 1 லட்சம் பயிர்க்கடன் வாங்கி இது வர பலவருடமா கடன் கட்ட முடியல னு வச்சிக்கிட்டோம்னா அவர் வெறும் 10000 முதல் 20000 காட்டினா போதும் அவரோட கடன்ல மீதி இருக்கிற வட்டி அசல் மற்றும் அனைத்து தொகையும் தள்ளுபடி செய்து கடன close pannikalam.
அசல் 20 லட்சம் வரை இருக்குற அனைத்து கடன்களையும் இந்த திட்டத்து மூலமா close பண்ணலாம்.
கடன் கட்டாம வழக்கு நீதிமன்றத்துல நிலுவைல இருக்கக்கூடிய அனைத்து கடன்களையும் இது மூலமா நீங்க close செய்ய முடியும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து நீதிமன்றம் செலவுகளும் தள்ளுபடி செய்றாங்களாம்.
இன்னொரு நற்செய்தி என்னனா விவசாயிகள் 30 நாட்கள் கழிச்சு அதே வங்கி கிளையில் மீண்டும் விவசாய கடன் பெறலாம்.
நான் 8 வருடத்துக்கு முன்னாடி 1 லட்சம் கல்விக்கடன் வாங்கி 1 ரூபா கூட திருப்பி செலுத்த முடியல. பேங்க் மேனேஜர் இது நாள் வர மொத்தம் 200000 க்கு மேல கட்ட வேண்டி இருக்கு ஆனா வெறும் 21000/- கட்டி close பண்ணிகலாம் னு சொன்னார் என்னால நம்பவே முடியல. பிறகு எனக்கு அத எழுதியே கையெழுத்து போட்டு கொடுத்தாரு. நா அப்போவே பணத்த ரெடி பண்ணி கட்டிட்டேன், கிலோசிங் சான்று அன்னிக்கே வாங்கிகிட்டு வந்துட்டேன். என்னால இன்னமும் நம்பவே முடியல. ஸ்டேட் வங்கிக்கு இதய பூர்வ நன்றி.
இதே போல கல்விக்கடன் மட்டும் இல்லாம பயிர்க்கடன், ட்ராக்டர்கடன், தொழில் கடன், சிறு தொழில் கடன் னு பல்வேறு நாள்பட்ட கடன்களுக்கு இது பொருந்துமாம். தெரிஞ்சவங்களுக்கு சொல்லவும் சொன்னாரு.
கிளை மேலாளரை இது அனைவருக்கும் கிடைக்குமா னு கேட்டதுக்கு, "இந்த திட்டம் ஸ்டேட் வங்கி அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும்"னு சொன்னாங்க. ஆனா சில கிளைகள்ல இத செயல் படுத்துறது இல்லை னு சொன்னாரு. எனக்கு கிடைச்ச நல்லது எல்லாருக்கும் கிடைக்கணும், தயவு செய்து முடிந்த வர உங்களுக்கு தெரிஞ்ச அனைவருக்கும் பகிருங்கள். திட்டம் 31.01.2021 வரை மட்டுதாங்க.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக