வியாழன், 21 ஜனவரி, 2021

சசிகலாவுக்கு என்ன நடக்கிறது? உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம்..

சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதுவும் ஒரு நாடகமோ என்ற சந்தேகம் லேசாக எழுந்தாலும்கூட உண்மையிலேயே இவரின் ஆரோக்கியம் கெட்டுப்போயிருக்க வாய்ப்பிருக்கிறது .
ஏராளமான மன உளைச்சல் நீண்ட சிறைவாசம் வயதிற்கே உரிய ஆரோக்கிய குறைவு போன்ற காரணங்கள் ஏராளம் உண்டு .
இவை எல்லாவற்றையும் விட இவரின் அரசியல் எதிரிகள் மிகவும் அதிகம் . அதிலும் மத்திய மாநில அரசியல்வாதிகள் இவரின் வரவை விரும்பமாட்டார்கள் என்ற சந்தேகம் தெரிகிறது .
எனவே இவரின் உயிர் இன்று மிகவும் ஆபத்தில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது
இவருக்கு சர்வ வல்லமை உள்ள மத்திய மாநில அரசுகளிடம் இருந்து ஆபத்து வருவதாக இருந்தால் இவர் எப்படி இவற்றில் இருந்து மீளப்போகிறார் என்ற கேள்வி பலமாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அப்படி ஒரு ஆபத்து வருகிறது என்று சசிகலாவோ சசிகலாவை சார்ந்தவர்களோ நம்பினால்,
அவர்கள் நாடவேண்டியது திமுகவையும் தளபதி ஸ்டாலினையும்தான்
மத்திய மாநில அரசுகளை தட்டி கேள்வி கேட்க கூடிய வல்லமையும் ஓர்மமும் இன்று திமுகவிடம் மட்டுமே இருக்கிறது!

 BBC  :வரும் ஜனவரி 27ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையாக இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை பெங்களூருவில் உள்ள போரிங் மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டார்.

பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

63 வயதாகும் சசிகலா காய்ச்சல் மற்றும் சளியுடன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இணை நோய்கள் உள்ளன என்று அந்த மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஆக்சிஜன் அளவு 79 சதவிகிதமும் காய்ச்சலுக்கான அறிகுறிகளும் இருந்தன என்று போரிங் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உதவி நடவடிக்கைகள் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் அவரது உடல்நிலை மேலும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு செய்யப்பட்ட உடல் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்று மருத்துவமனை தெரிவிக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள் சிறை வளாகத்தில் உள்ள சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக