ஞாயிறு, 31 ஜனவரி, 2021

ஹரிநாடாரை அள்ளி சென்ற போலீஸ். கழுத்து நிறைய "நகைக்கடை".

Hemavandhana tamil.oneindia.com: சென்னை: அந்த ஒருநாள் ஹரிநாடார் போலீஸ்காரர்களிடம் சிக்கி திணறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.. நடமாடும் நகைக்கடையாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்த ஹரி நாடாரை, அதிகாரிகள் கொத்தோடு அள்ளி சென்று காரில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.             தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து, கைகளில் எல்லாம் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், காஸ்ட்லி கார்.. பந்தா லுக்.. இதுதான் ஹரி நாடார்!    நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடித்து எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.     அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுடன் இருப்பாரே, சாட்சாத் அவரேதான்..!               அவரை பற்றின ஒரு செய்தி வந்துள்ளது.. ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி நாடார், தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆலங்குளம் செல்ல வேண்டி இருந்தது.. அதற்காக, திருவனந்தபுரத்துக்கு பிளைட்டில் சென்று, .அங்கிருந்து காரில் ஆலங்குளம் செல்வதுதான் இவரது பிளான்.
நகைகள் அதற்காக சென்னை ஏர்போர்ட் வந்தார் ஹரி.. ஆனால், அங்கிருந்தோர் எல்லாரும் ஹரி நாடாரை ஆச்சரியத்துடன் ஒரு லுக்கு விட்டபடியே நகர்ந்தனர்.. வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கமாக செக்கிங் என்பது ஏர்போர்ட்டில் நடக்கும்.. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் தங்கத்தை யாரும் கொண்டு வரக்கூடாது.. இதற்கு தனியாகவே சோதனைகள் உண்டு.. அதிகாரிகளும் உண்டு..

விசாரணை ஆனால், இப்படி கழுத்தில் மட்டும் கிலோ கணக்கில் நகையுடன் வந்த ஹரியை வினோதமாக பார்த்தனர்.. அவர்கள் மட்டுமில்லை, அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கே லைட்டாக சந்தேகம் வந்தது. அதனால், 28-ம்தேதி காலையில், ஹரிநாடாரை சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள், தடுத்து நிறுத்தினர்.. அவரிடம் விசாரணையும் ஆரம்பித்துள்ளனர்.. கழுத்தில் மட்டுமே கிலோ கணக்கில் நகை இருந்தது

போலியா? இதெல்லாம் உண்மையான நகையா? போலியா என்று கேட்டுள்ளனர்.. அதற்கு ஹரிநாடார், எல்லாமே சுத்த தங்கம், 916 ஒரிஜினல் தங்கம் என்று விளக்கம் தந்துள்ளார். இதன்பிறகு, அதிகாரிகள் அவரை திருவனந்தபுரம் பிளைட் ஏறுவதற்கு அனுமதித்தனர்.. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. எனவே திருவனந்தபுரம் வருமானவரித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சுத்த தங்கம் அதற்குள் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் வந்திறங்கினார் ஹரி நாடார்.. அவரை அங்கு தயாராக இருந்த வருமான வரித்துறையினர் அப்படியே கொத்தாக பிடித்து கொண்டு போய் காரில் ஏற்றினர்.. இதனால் ஒரு நிமிஷம் மிரண்டு போய்விட்டார்.. பிறகு அவர் கழுத்தில், கையில் இருந்த எல்லா நகையும் ஒவ்வொன்றாக செக் செய்யப்பட்டன.. கடைசியில் எல்லாமே சுத்த தங்கம் என்று தெரியவந்தது.. ஆனால், 3 கிலோ 450 கிராம் எடை கொண்ட நகைகளை உடம்பெல்லாம் அணிந்துள்ளார் ஹரி.

பணம் இப்போது அடுத்த சந்தேகம் ஆரம்பமானது.. இவ்வவு நகைகளை வாங்குவதற்கு உங்க கிட்ட ஏது பணம்? என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு ஹரி நாடார், தான் ஒரு சினிமா பிரமுகர், பிசினஸ் மேன், பைனான்ஸ் நடத்தி வருகிறேன் என லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார். இப்போது அடுத்த கேள்வி ஆரம்பமானது.. இந்த வருஷம் ஏன் நீங்க இதுவரைக்கும் வரி செலுத்தவில்லை என்றனர்.. அதற்கு ஹரிநாடார், "இந்த மார்ச் வரைக்கும் டைம் இருக்கே, அதனால் செலுத்திவிடுவேன்" என்றார். அப்போதும் அதிகாரிகள் விடவில்லை.. வரி செலுத்தினால் எந்தவித நடவடிக்கையுமின்றி விடுவிப்போம் என்று சொன்னார்கள்

ஒப்படைப்பு இதையடுத்து, வேறு வழியின்றி ஹரிநாடார், தன்னுடைய ஆபீசுக்கு போன் போட்டார்.. பிறகு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் 1 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த ஒப்புக் கொண்டார்.. அதன்பிறகே ஹரிநாடார் அணிந்திருந்த நகைகள், திரும்பவும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.. இறுதியாக, 29-ம்தேதி நைட், ஹரி அந்த மொத்த நகையையும் கழுத்தில் போட்டுக் கொண்டு, ஏர்போட்டை விட்டு ஜம்முன்னு தகதகவென வெளியே வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக