சனி, 23 ஜனவரி, 2021

ஜோ பைடன் பாஜக - RSS சோனல் ஷா . அமித் ஜானி ஆகியோரை விலக்கி வைத்தார் ! joe biden exclude sonal shah amit jani

Indian-Americans With RSS Links Don't Make It to Biden's First Cut
Image may contain: text that says 'oneindia tamil 2.8M பின்பற்றுவோர் பாலோயிங் பாஜக-ஆர்எஸ்எஸ் பாஜக- தொடர்பு... பைடன் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு இந்தியர்கள் 22 Jan 21 1:58 PM'
Tamiloneindia :பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுட னான தொடர்பு காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும்.
ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
விலக்கி வைக்கப்பட்ட இருவர்
பைடன் நிர்வாகத்தில் பணிபுரிய இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேர் நியமிக்கப்பட்டுள் ளனர். இருப்பினும், முன்பு பரிந்துரைத் திருந்த பட்டியலுடன் பார்க்கும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட் டுள்ளது. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புக ளுடனான தொடர்பு காரணமாக இவர்க ளை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைடனுக்கு கடிதம்
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிலுள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றாக பைடனுக்கு கடிதம் அனுப்பினர். அதில், "இந்தியாவில் தீவிர வலதுசாரி இந்து அமைப்புகளுடன் உறவு கொண்ட பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர். பைடன் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது" என்று கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருவரும் இந்து மதவாத குழுக்களிடமிருந்து நிதியுதவி பெற்றவர்கள் என்றும் இந்து ஆதிக்கத்திற்கு ஆதரவாகப் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
மேலாதிக்கவாதிகள்
இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெளிநாட்டு முகவர்கள் என்ற குற்றச்சாட்டும் அதில் முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும், "டிரம்பிற்கு எதிரானவர்களைப் போல காட்டிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ள ஜனநாயகக் கட்சியில் முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டனர். ஆனால் இந்தியாவில், இவர்கள் டிரம்பின் வெள்ளை இனவாத சிந்தனையாளர்களுக்குச் சமமானவர்கள், இந்து மேலாதிக்கவாதிகள். அமெரிக்காவில் இந்து சிறுபான்மையினராக தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவில் மேலாதிக்கவாதிகளாக உள்ளனர்.
மேலாதிக்கவாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது
அமெரிக்காவில் அவர்கள் இனவெறியை எதிர்த்துப் போராடுவதைப் போலவும் பன்முக கலாச்சாரத்தை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்களது சொந்த இனவெறியை நிலைநிறுத்துகிறார்கள். எனவே, உங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்து மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கத்தை ஆதரிக்கும் நபரும் உங்கள் நிர்வாகத்தில் இருக்கக் கூடாது" என்று பைடனுக்கு இந்திய அமைப்புகள் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சோனல் ஷா
இந்தக் கடிதத்தைத் தொடர்ந்தே அவர்களின் நியமன ஆணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனல் ஷா, பைடனின் ஒற்றுமை குழுவில் பணியாற்றியவர். அவரது தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ஏகல் வித்யாலயாவை தோற்றுவித்தவர். மேலும், பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவின் தலைவராகவும் அவர் இருந்தார்.
அமித் ஜானி
இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் பைடனின் 'முஸ்லீம் அவுட்ரீச்' பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளராக அமித் ஜானி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் இவர் நெருக்கமான உறவைக் கொண்டு உள்ளார். இருவருமே ஒபாமா நிர்வாகத்திலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக