சனி, 23 ஜனவரி, 2021

தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் பிரதமர் மோடி” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு!

Image may contain: 1 person, text that says 'NEWS FAML BREAKING கோவையில் ராகுல் காந்தி பேச்சு! "தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல, தமிழ்நாடே இந்தியா என்ற நிலை உருவாகும்!" 23 JAN 2021 010 191 071 059 1548'
kalaignarseithigal.com :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., 3 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

இன்று முதல் 25-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று காளப்பட்டி சாலை சுகுணா ஆடிட்டோரியத்தில் தொழில் முனைவோரிடம் கலந்துரையாடினார் ராகுல் காந்தி.    அப்போது பேசிய ராகுல், “ஜி.எஸ்.டியால் தொழில்துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஆளும் பா.ஜ.க அரசு புரிந்துகொள்ளவில்லை.   பேங்கிங் சிஸ்டம் பெரும் முதலாளிகளுக்கே சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார கொள்கை சிறு-குறு தொழில்துறையினரை பாதித்துள்ளது. சிறு-குறு தொழில் முனைவோருடைய தொழில் வரிகளால் அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. அதை அவிழ்த்துவிட்டால், சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி விடலாம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியா முழுவதும் சரியாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். பா.ஜ.க-வின் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையால் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மோடி தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ மதிப்பதில்லை. தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். மோடி மக்களுக்கு சொந்தமானதை விற்க முயற்சி செய்கிறார். விவசாயிகளின் உரிமையை 3 வேளாண் சட்டங்கள் மூலம் பறிக்க நினைக்கிறார்.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே எரிபொருள் விலை குறையும். நீங்கள் விரும்பும் அரசை கொண்டு வர உதவத்தான் தமிழகம் வந்துள்ளேன்.” எனப் பேசினார்.

“தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் பிரதமர் மோடி” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு!

அவிநாசி புதிய பேருந்துநிலையத்தில் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தமிழக அரசை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார். தமிழர்களின் வரலாறும், உணர்வும் அவருக்கு தெரியாது.

தமிழர்களின் உணர்வை ஒருபோதும் விலை கொடுத்து வாங்க முடியாது. விவசாயத்தையும், சிறு குறு தொழில்களையும் 5 அல்லது 6 முதலாளிகளிடம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறார்” எனச் சாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக