வெள்ளி, 1 ஜனவரி, 2021

திரையரங்குகளைத் திறக்கலாம்!" - பினராயி விஜயன் அறிவிப்பு!

nakkeeran : கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல், திரையரங்குகளைத் திறக்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார்.    
kerala

கேரள மாநிலத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா  தடுப்பு  நடவடிக்கை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டிருந்த  நிலையில், தற்போது கேரள முதல்வர் பல்வேறு தளர்வுகளை இன்று (01.01.2021) வெளியிட்டுள்ளார். ஜனவரி 5-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தினால், 100 பேரும், வெளியே நிகழ்ச்சிகள் நடத்தினால், 200 பேரும் பங்கேற்கலாம் என்பன உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக