திங்கள், 11 ஜனவரி, 2021

இஸ்லாமிய சமூகம் படும்பாடு அவர்களே தேடிக்கொண்டதாகவே ...

Image may contain: 4 people, crowd and outdoor
ஆலஞ்சியார் : · தமிழக முஸ்லிம்கள் .. என் அடையாளத்தை இறக்கிவைத்துவிட்டு பேசவரவில்லை ஆனாலும் இதுதான் என் அடையாளமென முத்திரை குத்தியிருக்கிறீர்கள் .. நான் முதலில் மனிதன் இனத்தால் திராவிடன் மொழியால் தமிழன் என்ற என் உண்மையான அடையாளத்தை இழந்து பேசினால் அது பொய்யாகிவிடும்.. என் மீது சுமத்தபட்ட சுமையின் வலி உணர்ந்தவன் பொய்யோ சரியோ இதை நான் இழக்க சமூகம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது அரசும் கூட.. ஆனால் சமீபகாலமாக இஸ்லாமிய சமூகம் படும்பாடு ..அதை அவர்களே தேடிக்கொண்டதாகவே உணர்கிறேன்.. வேறெங்கும் இல்லாதளவில் இங்கே தலைவர்கள் உண்டு .. அரசில் அதிகாரமென்பது ஏன் கிடைக்காமல் போனதென்று யாரும் மீளாய்வுசெய்யவே இல்லை.. யார் உண்மையான நண்பன் என்ற தெளிவு நிச்சயமாக இல்லை ‍‍.. எந்த மண்ணில் வாழ்கிறோம் நம் கலாச்சாரம் எது நம் பண்பாடு எதுவென்ற புரிதலை விட்டு விலகி குறைய காலமாகிவிட்டது .. வாழ்வியல் வழிமுறைகள் வேறு அரசியல் வழிகள் வேறென்ற முதலில் வரையறுக்காமல் இலக்கை கூட அடையாளம் காண முடியாது ..
..
கைரளியர்கள் (மலையாளிகள்) குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஒன்றை புரிந்து அதன்படி செயல்படுகிறது .. வழிபாடு கோட்பாடு இரண்டையும் உணர்ந்தவர்கள் அரசியலை அரபுதேசத்தில் செய்யவில்லையென்ற தெளிவாக புரிந்து இங்கேதான் சண்டையிடவேண்டும் நமக்கான அரசியலை யார் தடுக்கிறார்கள் யார் நம் மீது பகையோடு இருக்கிறார்கள் யாரால் நம் உரிமைகளை இழக்க நேரிடுகிறதென்ற தெளிவு அவர்களிடத்தில் உண்டு அதிலும் ஒற்றுமைதான் அதிகாரத்தில் அமர்த்துமென்ற அறிவு அவர்களுக்குண்டு. பிற மாநிலங்களில் பெருமளவில் முஸ்விம்கள் வாழ்ந்தாலும் அரசு அதிகாரத்தை நினைத்துபார்க்கவே முடியாத நிலைதான் ..இதுதான் உண்மை .. பத்து தலைவர் என்றால் பத்து இயக்கம் .. எல்லோரும் தன் சுய எழுதலுக்காக தன் முகவரிக்காக சமுதாயத்தை கூறுபோட தயங்குவதே இல்லை .. தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள யாரை வேண்டுமானாலும் "பலிகொடுக்க" தயார்.. சமூக மக்களை பிரித்து எளிதாக தோற்க வகைசெய்வதில் என்ன பயன்..விடுதலை இந்தியாவில் செல்வாக்கோடிருந்த சமூகத்தின் இன்றைய நிலை என்ன..? அரசு அதிகார பகிர்வு இன்னும்,சொல்லபோனால்  தீர்மானிக்கும் சக்தி ஆக இருந்த ஒரு சமூகம் இன்று அல்லல்படுகிறதே எதனால்
சரியான வழிகாட்டுதல் இல்லையா ..அல்லது பதவி மோகத்தில் கோடாரிகள் ஆனார்களா.. சுயலாபத்திற்காக எதையும் இழக்க தயாரானார்களா .. அல்லது ஒற்றுமையின்மையா.. இவையனைத்தும் கொண்ட சமூகம் எக்காலத்திலும் வெற்றிபெற முடியாது
..
உங்கள் வணக்கவழிபாடுகளை உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் யார் எங்கே அரசியல் செய்கிறீர்களோ அந்த மண்ணின் (மாநிலம்) அரசியலை கையிலெடுங்கள்.. யார் மண்ணின் மக்களின் எதிரியென்பதை முடிவு செய்யுங்கள் .. இங்கே நிம்மதியோடு வாழ யாரை பின்துணைப்பது யாரை நிறுத்துவதென முடிவு செய்யுங்கள் முதலில் நமக்கான இயக்கமெது நமக்கான தலைவன் யாரென தேர்வு செய்யுங்கள் ..இங்கும் அங்கும் ஓடிதிரியும் கழிசடைகளை புறந்தள்ளுங்கள் ஏனெனில் அவர்கள் ஆபத்தானவர்கள் .. இங்கே சமூக முன்னேற்றத்திற்காகவோ அல்லது சமூகத்தின் உரிமைக்காகவோ சமூகமிழந்தவற்றை மீட்கவோ வரவில்லை அவர்கள் முகம்தெரியவேண்டும் தங்களை முன்னுறுத்திய அரசியல் வேண்டுமென்றவர்கள் தெளிவற்ற கொள்கைகள் யார் சீட் தருகிறார்களோ அவர்களை புகழ்ந்து பாடும் பட்சிகள்.. சமூகதலைவர்களையே குறைபேசி திரியும் மூடர்கள் ..
சரியான தலைவரை எளிமையானவரை இழிச்சொற்களால் வசைபாடும் குறைமதியாளர்கள்..
..
நல்ல தலைவனை கண்டெத்துங்கள் சமூகபிரிவினைவாதிகளை முற்றிலுமாக புறக்கணியுங்கள் .. நீண்ட காலம் தேவைபடலாம் ஆனால் இறுதியில் தீர்மானிக்கும் சக்தியாக வலுபெறலாம்.. அதுவரை யாரை பின்துணைப்பதென்பதை அறிந்து அரசியல் செய்யுங்கள் குறிப்பாக இளைஞர்களை அரசியல் பழக சொல்லுங்கள்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக