திங்கள், 14 டிசம்பர், 2020

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக Total cost : 705 கோடி. (Aprox)

Muralidharan Pb : New Parliament Vs New Secretariat Complex எந்த விவரமும் தெரியாமல் நிறைய பாஜக ஆதரவு கும்பல் பொய்களை உண்மை என்று போட்டு அகம் மகிழ்வது எப்போதும் நடப்பது தெரிந்ததே.
அரவிந்த் கேஜரிவால் அரசு தான் முதன்முதலில் பாலம் கட்டி, அதில் சில கோடிகளை அரசுக்கு மிச்சப்படுத்தியது என்று தூக்கிட்டு வருவார்கள். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் திமுக அரசு பாலங்களை குறித்த நேரத்திற்கு முன்பே கட்டி பல கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு மிச்சம் படுத்தியது நடந்துள்ளது.
அதே போல், பின்னராயி விஜயன் அரசு தான்
Image may contain: outdoor

முதன்முதலில் பாதாள சாக்கடையில், மனித மலத்தை அள்ளும் இயந்திரங்களை கொண்டுவந்தது என்று பேசினார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதன் முதலில் கலைஞர் அரசு 2006-2011 ஆட்சியிலேயே இதை செய்துவிட்டது.
தற்போது அண்மையில் ஒரு பீலாவை விட்டுக்கொண்டு திரிகிறது சங்கிக் கூடாரம். அது என்னவெனில்,
2020ல் மோடி அரசு 920 கோடியில் 65000 சதுர அடியில் பாராளுமன்றக் கட்டிடத்தை கட்டிட பூமி வழிப்பாடு செய்துள்ளார். ஆனால் திமுக அரசு 12 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 20000 சதுர அடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட 465 கோடிகள் செலவழித்து உள்ளது என்று அபாண்டமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தின் பரப்பளவு...
Block A - 9,30,297 Sq. ft
Block B - 7,43,900 Sq. ft
மொத்தம் - 16,74,197 Sq. ft
சதுர மீட்டரில் சொல்வதாக இருந்தால் 1,55,538 SqM.
Total cost : 705 கோடி. (Aprox)
RSS/BJP அரசு கட்டும் பாராளுமன்றம் கட்டிடத்தின் பரப்பளவு...
65,000 SqM!
Total Cost : 970 கோடி!
மக்களே வேறுபாட்டை உணருங்கள்!
ஊழல் ஆட்சி செய்வது யார்!!???
நம்பவில்லையா? முதல் கமெண்டில் தகவல் உள்ளது
சமூக ஊடகங்கள் அன்றே இருந்திருந்தால் மகோரா மேனன், அம்மு போன்றோர் உண்மைத்தன்மையை எல்லாம் எப்பவோ தோலுரிக்கப்பட்டிருப்பார்கள்.
"பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்"- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.
உண்மை சாகாது. உண்மைக்கு எப்போதும் உயிர் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக