சனி, 12 டிசம்பர், 2020

கோயில் மணியின் கயிறு கழுத்தில் சிக்குண்டதில் உயிர்நீத்த பாடசாலை மாணவன்.. இலங்கை மலையகம்

.hirunews.lk :   கோயில் மணியின் கயிற்றில் தொங்கியபடி விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தில் அக்கயிறு சிக்குண்டதில் அம்மாணவன் மரணமடைந்துள்ளார். எட்டு வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த மாணவன் தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள கோயில்  மணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அக்கயிறு கழுத்தில் சிக்குண்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அவதானித்த தோட்ட அதிகாரி குறித்த சிறுவனை காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். எவ்வாறெனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதும் அவர் உயிழந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மேற்படி சிறுவனின் உடல் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹற்றன் மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த இடத்தை சோதனையிட்ட பின் சிறுவனின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக நோர்வூட் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக