வெள்ளி, 11 டிசம்பர், 2020

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் : கொள்ளையர்கள், ரவுடிகள், கற்பழிப்பு காவாலிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

Image may contain: 1 person, text that says 'மோடியின் முகத்திரையை நார்நாராகக் கிழிக்கும் தரமான கேள்விகள்! பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் சாட்டையடி கேள்விகளுக்கு சங் பரிவார கூட்டங்கள் திராணி இருந்தால் பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்! -பகிரங்க சவால்! facebook syedibrahim.m.s.official'
மோடியின் முகத்திரையை நார்நாராகக் கிழிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வஸந்தனின் தரமான கேள்விகள்..
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் சாட்டையடி கேள்விகளுக்கு சங் பரிவார கூட்டங்கள் திராணி இருந்தால்
பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்!
-பகிரங்க சவால்!
பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!
மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட...
4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?
6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்?
8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி?
16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?
22. கொள்ளையர்கள், ரவுடிகள், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?
இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் மோடி புனிதர்,
வலுவானவர்...
பாஜக உத்தமர்கள் கட்சி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக