வியாழன், 3 டிசம்பர், 2020

பன்னீர்செல்வம் : ரஜினியுடன் வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்


nakkeeran : வருகின்ற 2021 ஜனவரி மாதம், அரசியல் கட்சித் தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 -ஆம் தேதி வெளியாகும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்துத் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்குப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், “சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவரது வரவு நல்வரவாக அமையட்டும்” எனத் தெரிவித்தார். ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்., எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம் வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக