ஞாயிறு, 20 டிசம்பர், 2020

துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவால் நிருபர்கள் செல்போன்கள் பறிப்பு

  dhinakaran:  போடி:  தேனி மாவட்டம், போடி ஜக்கம்மநாயக்கன்பட்டியில் பொதுப்பாதை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே கடந்த 17ம் தேதி மோதல் ஏற்பட்டது.  இதில் பலர் காயமடைந்தனர். இது பற்றி முறையிட 20க்கும் மேற்பட்டோர் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்றனர். இதை சில ஊடகத்தினர் செல்போனில் பதிவு செய்தனர். அப்ேபாது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு காரில் வந்தார். அங்கு சில நிருபர்கள், காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களின் செல்போன்களை வாங்க உத்தரவிட்டார். உடனடியாக நிருபர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் பறிக்கப்பட்ட செல்போன்களில் இருந்து காட்சிகள் அழிக்கப்பட்ட பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக