ஞாயிறு, 20 டிசம்பர், 2020
ஸ்டாலின் ஜாதியை குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு . தவறுக்கு மன்னிப்பு கேட்டார்
newstm.in :திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்ட சாதியை குறிப்பிட்டு விமர்சித்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கோரியுள்ளார்.
மதுரையில் அம்மா கிளினிக்கை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரைச் சொல்லி, அந்த புத்திதானே இருக்கும் என்று பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாம் பேசியதற்க அவர் மன்னிப்பு கோரியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யதார்த்தமாக பழமொழியை குறிப்பிட்டதாக கூறினார்.
மேலும், நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை, செய்தியாளர் சந்திப்பில் ஜாதி குறித்து பேசவில்லை என விளக்கமளித்தார். தேர்தல் நேரத்தில் எனக்கு யாரும் ஜாதி சாயம் பூச வேண்டாம் என்றும், அப்படி பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக