செவ்வாய், 24 நவம்பர், 2020

பெண்ணியம் என்பது தனிமனித உரிமைகள் மட்டுமல்ல ஒரு சமூகமாக பெண்களாகிய நாம்.. More than individual rights feminism is a mass movement .

Shalin Maria Lawrence : · கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் . உங்களுக்கு உடல் நிலை சரி இல்லை .நீங்கள் ஒரு மருத்துவமனைக்கு சொல்லுகிறீர்கள்.அங்கே இருக்கும் மருத்துவர் உங்களின் சாதி என்ன ,நீங்கள் என்ன மதம் ,நீங்கள் என்ன வர்கம் ,நீங்கள் பக்கத்து வீடு காரரோடு சண்டை போடுபவரா ,நீங்கள் மற்றவர் மீது பொறாமை படுபவரா ,நீங்கள் எதனை பேருக்கு உதவி செய்து இருக்கிறீர்கள் போன்ற விஷயங்களின் அடிப்படையில் உங்களுக்கு மருத்துவம் பார்ப்பாரா? இல்லை இதில் ஏதாவது ஒன்று அவருக்கு சரிப்படவில்லை என்று மருத்துவம் பார்க்க முடியாது என்று உங்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரா ? உங்களுக்கு என்ன நோயோ தானா அறிகுறி மட்டுதானே கேட்க படுகிறது ? 

ஏனென்றால் நவீன மருத்துவத்தின் எத்திக்ஸ் அது .நோயாளியின் யாராக இருந்தாலும் எந்த பாரபட்சமும் இல்லாமல் அவர்களை குணப்படுத்த வேண்டும் .அதுவே மருத்துவத்தின் தலையாய கடமை. இதையே நாம் பெண்ணியத்திற்கு எடுத்து கொள்வோம் . இங்கே சமத்துவம் விரும்பும் பெண்கள் கேட்கிறார்கள் .நாங்கள் எந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் ?எது பெண்ணியம் ? எல்லா ஜாதி பெண்களுக்கும் பெண்ணியம் உண்டா ? இந்த கேள்வி அவர்களால் கேட்கப்படவில்லை. மாறாக ஆண்கள் ஏற்படுத்திய குழப்பத்தின் காரணத்தால் அவர்களுக்கு இந்த கேள்வி மனதில் எழுகிறது .

அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது மிகவும் எளிதான ஒன்றுதான்.சமூக நீதி எனும் மருத்துவ மனையை தேடி வரும் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களுக்கும் சமத்துவம் என்கிற மருந்து கொடுக்கப்பட வேண்டும் .ஏனென்றால் பெண்ணியம் என்பது மருத்துவம் .Its medicine for a social illness called Patriarchy .
 
ஆனால் இங்கே மருத்துவம் ஆளுக்கு ஆள் மாறுபடும் .அதே போல் யாருக்கு முதலில் மருத்துவம் தேவையோ அவர்களுக்கு அவசர சிகிட்சையும் ,மற்றவர்களுக்கு வெளி நோயாளி அறையிலும் மருத்துவம் பார்க்கப்பட வேண்டும் .இங்கே தான் தலித் பெண்ணியம் ,intersectional feminism போன்ற விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் .ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு பிரச்சனை அதிகம்.குத்துயிரும் குலையுயிருமாக கிடைக்கும் அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் .ஸ்பெஷலிஸ்டுக்கள் வேண்டும் .
மூச்சு திணறலா ?ஐசியு வுக்கு போக வேண்டும் .
சாத ஜுரமா டாக்டர் ஊசி போட்டால் போதும் .
இப்படி சமூகத்திற்கு தகுந்தாற் போல் பிரச்சனைகள் மாறினாலும் ,மருந்துகள் மாறினாலும் ,மருத்துவம் பார்க்கப்பட்ட ஆகா வேண்டும் .சிறிய நோயென்றோ ,பெரிய நோயென்றோ ஒப்பேடு செய்து வெளியே ஆனுப்புவது மருத்துவ அறம் கிடையாது .அதுதான் சமநீதி .
இதே போல் தான் பெண்ணியம் பாரபட்சம் பார்க்காது .
அதே போல் ஒருவன் இன்னொருவனை கத்தியால் குத்திவிட்டான் .குத்து பட்டவனுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது .குத்தியவன் ஜெயிலில் இருக்கிறான் ,அவனுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் அவனுக்கும் மருத்துவம் பார்க்கப்படும் .மறுக்க படாது .எவ்வளவு அழகான விஷயம் பாருங்கள் .நீதியும் மருத்துவமும்.
நீதி பாரபட்சமில்லாதது .அது எல்லோருக்குமானது .ஆனால் பிறப்பின் அடிப்படையில் அது உனக்கு கிடைக்காது என்று எந்த ஜாதி பெண்ணையும் பார்த்து என்னால் சொல்ல முடியாது .அப்படி சொன்னால் அதுவும் பார்ப்பனீயம் .
பெண்ணியம் அப்படியல்ல .பெண்ணியம் சமமானது .எல்லோருக்குமானது .அன்னை சாவித்ரி பாய் பெண்களுக்கான பள்ளியை எல்லா சமூக பெண்களுக்காகவும் தான் துவங்கினார் .பாபாசாகேப் அம்பேத்கர் ஹிந்து மசோதா கொண்டு வந்தது எல்லா பெண்களுக்கும் தானே ? தந்தை பெரியார் எல்லா பெண்களுக்காகவும் தான் பேசினார் .பெண்களுக்காக எல்லா ஆணையும் ஓநாய் என்றார் .எந்த ஆணையும் நம்பாதே என்றார் .எங்கேயாவது எந்த பெண்ணையும் நம்பாதே என்றாரா ?
ஆதிக்க சமூக பெண்களோ ,பார்ப்பனிய பெண்களோ அவர்கள் ஜாதி பார்க்கிறார்கள் என்றால் நாம் எதிர்க்க வேண்டியது அவர்களின் சாதி வெறியை .அவர்கள் பேசும் பெண்ணியத்தை அல்ல .அவரவருக்கு அவரவர் பிரச்சனை வீட்டிலும் ,வெளியிலும் .ஆனால் என் பிரச்சனையை விட உன் பிரச்சனை சிறுது .இதை முடித்துவிட்டு உனக்காக வேண்டுமானால் குரல் கொடுக்கிறேன் என்று சொல்கிற உரிமை இருக்கிறது ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு .ஆனால் எந்த ஆணும் இதை சொல்லி கொடுக்க கூடாது .எது பெண்ணியம் எது பெண்ணியம் இல்லை ,எந்த பெண்ணுக்கு அதை பேச உரிமை இருக்கிறது என்றெல்லாம் ஆண்களுக்கு பேச உரிமை கிடையாது .
அதேபோல் பார்ப்பன பெண்களுக்கு பெண்ணியம் தேவையில்லை ,பெண்ணியமே தேவையில்லை ,பெண்ணியம் என்பது பார்ப்பனீயம் போன்ற அபத்தங்களை பெண்கள் பேசுவதும் உள்வாங்கிய ஆணாதிக்கம்தான் காரணம் .
நான் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் .என் வலிகள் அதிகம் .அதனால் தான் மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களின் சிறு வலியும் எனக்கு புரிகிறது .அவர்களுக்கு சமத்துவம் கிடைக்க வேண்டும் என்று என் நெஞ்சம் நெகிழுகிறது .நாம் வலியால் இணைந்தவர்கள் .நாம் அனைவரும் சமூகம் தாண்டி ஒன்றுபட்டால் செய்யக்கூடிய காரியங்கள் எவ்வளவு பலமானதாக இருக்கும் என்று எனக்கு தெரியும் .
அதுமட்டுமல்ல .பெண்ணியத்தின் வடிவில் நான் மற்ற சமூகங்களின் பெண்களுக்கு சமத்துவத்தை ருசிக்க கொடுக்கிறேன் .சமத்துவம் இப்படித்தான் இருக்கும் .நன்றாக இருக்கிறதா ? எனக்கும் ஜாதி,வர்க்க பாரபட்சமில்லாத சமத்துவம் வேண்டும் .கொடு. இது தான் என்னுடைய அன்பின் செய்தி அவர்களுக்கு .
முக்கியமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன் .பெண்ணியம் என்பது தனிமனித உரிமைகள் மட்டுமல்ல ஒரு சமூகமாக பெண்களாகிய நாம் பாகுபாடுகள் களைந்து அமைப்பாக திரளுவது .More than individual rights feminism is a mass movement .
ஆகவே பெண்களை பெண்களுக்கெதிராக தூண்டிவிடும் ஆண்களின் பழைய தந்திரத்தை இனிமேலாவது சமயோஜிதமாக புறம் தள்ளுவோம் .அது எந்த முற்போக்கு முகமூடியை போட்டு வந்தாலும் சரி.
To be progressive is to be inclusive .If it is otherwise then it is Bullshit.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக