செவ்வாய், 24 நவம்பர், 2020

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு

maalaimalar : தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களை தவிர எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியவாவது:- நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக