வெள்ளி, 20 நவம்பர், 2020

திராவிட இயக்கத்தின் புரட்சி மாதம் நவம்பர்!

Saravanan M : · திராவிட இயக்கத்தின் புரட்சி மாதம் நவம்பர்! - வைகோ. நீதிக்கட்சி பிறந்த இந்த நவம்பருக்கு வரலாற்று முக்கியத்துவங்கள் ஏராளம் உண்டு. நவம்பர் திங்கள் திராவிட இயக்கத்தின் பொன்னேடு. 1912 நவம்பரில்தான் டாக்டர் சி.நடேசனார் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப் பினை உருவாக்கினார். 1913 இதே நவம்பரில்தான் அதன் பெயர் திராவிடர் சங்கமாகப் பெயர் சூட்டப்பட்டது.
1914 இதே நவம்பரில்தான் டாக்டர் சி.நடே சனார் திராவிடன் விடுதியைத் தோற்றுவித்தார்.
1923 இதே நவம்பரில்தான் (நவ.19) நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றது.
1925 இதே நவம்பரில்தான் (நவ.22) தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
1928 இதே நவம்பரில்தான் (நவ.7) ரிவோல்ட்’ ஏட்டை தந்தை பெரியார் தொடங் கினார்.
1932 இதே நவம்பரில்தான் (நவ.7) அய் ரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துத் தந்தை பெரியார் திரும்பினார்.
1933 இதே நவம்பரில்தான் புரட்சி’ இதழை தந்தை பெரியார் தொடங்கினார்.
1938 இதே நவம்பரில்தான் (நவ.13) சென்னையில் கூட்டப் பெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு பெரியார்” என்ற பட்டம் சூட்டப்பட்டது.
1938 இதே நவம்பரில்தான் (நவ.14) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க தந்தை பெரியார் போர் முழக்கமிட்ட நாள்.
1957 இதே நவம்பரில்தான் (நவ.26) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட் டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.
1967 இதே நவம்பரில்தான் (நவ.28) சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாக முதலமைச்சர் அண்ணா அவர்கள் தனிச் சட்டம் அறிவிப்பு.
1992 இதே நவம்பரில்தான் (நவ.16) பிற் படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள்.
2003 இதே நவம்பரில்தான் (நவ.27) திராவிடர் கழகத் தலைவராக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்ற நாள்.
நவம்பர் புரட்சி என்று பொதுவுடைமை நண்பர்கள் கூறுவர். திராவிடர் இயக்கத்திற்கும் நவம்பர் மாதம் புரட்சி மாதம்தான்.
(நீதிக்கட்சி 102 ம் ஆண்டு விழா, 20 நவ 2018 சென்னை பெரியார் திடல்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக