ஞாயிறு, 29 நவம்பர், 2020

இந்தியிலும் கொண்டாடப்படும் பெரியார்... இந்தி நூல் தொகுப்பிற்கு பெரும் வரவேற்பு ..


tamil.samayam.com : சாதி ஒழிப்பு, பெண் சுதந்திரம், மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பகுத்தறிவு என தந்தை பெரியாரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் என்றென்றும் பேசப்படக் கூடியவை. இவரது விதையில் முளைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்தவை தான் திராவிடக் கட்சிகள். தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டியதில் திராவிடக் கட்சிகளின் பின்புலத்தில் பெரியார் போட்ட விதைகளும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. இவரது கடின உழைப்பால் தான் தமிழகம் முற்போக்கு சமூகமாக திகழ்ந்து வருகிறது. பெரியாரின் கருத்துகள் தமிழகம் தாண்டி பலருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் சாதிகளால் பிளவுபட்டு கடுமையான தீண்டாமையை கடைபிடித்து வரும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பெரியார் தேவைப்படுகிறார். அந்த வகையில் டெல்லி பேராசிரியர் பிரமோத் ரஞ்சன் மற்றும் காட்டாறு குழு ஆகியோர் இணைந்து பெரியார் இந்தி தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ' Caste system and father power ', ' Religion and World Vision ', ' True Ramayana ' ஆகிய புத்தகங்கள் அடங்கும்.



இதற்கு மேற்குவங்கத்தைச் சேர்ந்த இந்தி பேராசிரியர் கிரிபாசங்கர் சவுபே ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியில் வெளிவந்துள்ள பெரியாரின் நூல்கள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நூல் பற்றி விவாதங்களும் களைகட்டத் தொடங்கியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக