ஞாயிறு, 29 நவம்பர், 2020

க்ளீன் ரூம் டிசைன் அன்ட் கனஸ்ட்ரக்‌ஷன் .. ஒரு நட் போல்ட் கூட சனிட்டைஸ் செய்யாமல் உள்ளே சொல்லமுடியாது.

Image may contain: one or more people and indoor


Kathir RS : · நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். எங்கு வேலை செய்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என.. க்ளீன் ரூம் இஞ்சினியர் என்றாலோ க்ளீன் ரூம் டிசைன் அன்ட் கனஸ்ட்ரக்‌ஷன் என்றாலோ என்னவென்று புரியாமல் விழிப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு குறைந்தது பத்து நிமிடம் ஆகும். மற்றவர்களைப் போல ஆட்டோமொபைல், ஐடி, மெடிசின், பேங்கிங் என்று எளிதாக என்னால் சொல்ல முடியாது. ஃபார்மசியூட்டிக்கல் என்று சொன்னாலும் மெடிக்கல் ரெப்பா என்று கேட்பார்கள். இல்லை மேனுஃபாக்சரிங் ஃபெசிலிட்டி ப்ராஜெக்ட் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மையமாக தலையை ஆட்டிக் கொள்வார்கள்.

இந்த நிலையை கடந்த 18 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன்.
ஆனால் இன்று எனக்கு, நான் என்ன வேலை செய்கிறேன் என்று விளக்கமாக சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தில் வெள்ளையும் நீலமும் ஆக ஒரு கட்டுமானம் தெரிகிறதே அது..
மோடி நடந்து வரும் தரை மேலே தெரியும் சீலிங் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னல் நீலநிறத்தில் தெரியும் கதவுகள் இதைத்தவிர காற்று வருவதற்கான HEPA பில்டர்ஸ் அது வெளியே செல்வதற்கான ரைசர்ஸ் என அங்கு தென்படும் அனைத்தும் என் வேலை சம்பந்தப்பட்டதுதான்.
அங்கு தெரியும் அந்த கட்டுமானங்களைப்பார்த்தே என்னால் அது எந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது என்பதை கூட சொல்ல முடியும்.
அந்த கட்டுமானம் எந்த பொருட்களால் ஆனது என்பதையும் சொல்லமுடியும்.
இங்கு நீங்கள் பார்க்கும் இந்த வெள்ளை நிற அறையை தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் கிளீன் ரூம் என்று சொல்லுவோம்.
இது சாதாரண கட்டுமானம் அல்ல.
ஒரு கிளீன் ரூம் 100 சதுர அடியில் கூட இருக்கலாம் அல்லது 100,000 சதுர அடியிலும் இருக்கலாம் தேவையைப் பொறுத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்தின் தன்மையை பொறுத்து அந்த பகுதி கட்டுமானம் மாறுபடும்.
பார்ப்பதற்கு சாதாரண சிவில் வேலை போல தெரிந்தாலும் இது சிவில் வேலை அல்ல.
இதை கட்டுவதற்கு பல விதிகள், நியதிகள் இருக்கின்றன.
இங்கு வரும் காற்று, வெளியேறும் காற்று, இதன் வெப்பநிலை, ஈரப்பதம், தூய்மை நிலை ஆகியன மிகக்கவனமாக கட்டுப்படுத்தப்பட்டவை.
இந்த மருந்து உற்பத்தி அறைக்குள் வரும் தண்ணீர்,காற்று, உற்பத்தி மூலப்பொருட்கள்,உதிரி பாகங்கள்,மனிதர்கள் என அனைத்தும் தரக்கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
இதில் பல அடுக்குகளும் உண்டு எந்த அறைக்கு எப்படிப்பட்ட க்ரிட்டிக்காலிட்டி தேவை என்பதை வடிவமைத்து அதன்படி அதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த தொழில்நுட்ப அறைகள் நிறுவப்படுகின்றன.
இந்த அறைகள் இந்திய உணவு மருந்து பாதுகாப்பு ஆணையம் (FDA) பரிசோதனை செய்து சான்றிதழ் கொடுத்தால் தான் செயல்படமுடியும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோர் பெரும்பாலும் கடைபிடிப்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் (USFDA) வழிகாட்டுதல்களை.
இது மிகவும் கடுமையானதாகும்.
இந்த அப்ரூவலுக்காக இஞ்சினியரிங்& மெயின்டனென்ஸ் டிபார்ட்மென்ட் மேனேஜரின் கழுத்தைக்கூட பிடிக்கத் தயங்காத ப்ரொடக்‌ஷன் மேனேஜர்களை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
ஒருநாள் முன்பு வரை உயிரைக் கொடுத்து வேலை செய்த ஃபெசிலிட்டியில் அடுத்த நாள் ஆடிட்டிங் நடக்கும் போது மொத்த இஞ்சினியர்களின் மூச்சுக்காற்று கூட பட்டுவிடக் கூடாது என்ற அளவுக்கு அதீத தீண்டாமையுடன் அவமானப்படுத்தி ஃபேக்டரியை விட்டே துரத்தும் கொடுமைகளெல்லாம் நடப்பதுண்டு.
ஒரு நட் போல்ட் கூட சனிட்டைஸ் செய்யாமல் உள்ளே சொல்லமுடியாது.
உரிய பாதுகாப்பு ஆடைகளின்றி நிறுவனத்தின் உரிமையாளர் கூட உள்ளே செல்ல முடியாது.
புரொடக்ஷன் மேனஜர்கள் ஓனர்களை தடுத்து நிறுத்திய சம்பவங்கள் கூட நடந்ததுண்டு.
ஒருமுறை அந்த இடத்தில் தூசுகள் மைக்ரோபியல்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையைவிட அதிக அளவுக்குச் சென்றுவிட்டால் அதை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவர மொத்த ஃபெசிலிட்டியையும் ஃப்யூமிகேஷன் செய்து வேலிடேட் செய்ய வேண்டியது வரும் என்பதே இதற்கு காரணம்.
அதற்கான நேரம் பொருள் செலவு உற்பத்தியை நிறுத்துவதால் ஏற்படும் இழப்பு ஆகியன மிகப் பெரிய நஷ்டத்தை நிறுவனத்துக்கு ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஒருவேளை இத்தனை கட்டுப்பாடுகள் இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.
ஏதோ ஒரு தூசு துகள் காற்றிலிருந்தோ நமது ஆடைகளிலிருந்தோ தலை மயிரிலிருந்தோ பறந்து வந்து இன்ஜெக்டபிள் என்று சொல்லப்படுத் ஆம்ப்யூல் (Ampule) அல்லது வயல்களில்(Vial) மருந்து நிரப்பப்படும் வேளையில் உள்ளே சென்று விட்டால், அந்த மருந்து கன்டாமினேட் ஆகி நம் கண்களுக்குத் தெரியாமலேயே மார்க்கெட்டுக்கு வந்துவிடும்.
அந்த மருந்தை வாங்கும் யாரோ ஒரு நபரின் உயிருக்கே அது ஆபத்தாய் போய் முடிந்து விடும்.
அந்த மருந்தினால் தான் அவர் உயிருக்கு ஆபத்து வந்தது என்று தெரியவந்தால் அந்த மருந்து நிறுவனத்தையே மூடக்கூடிய நிலை வரை இந்த பிரச்சனை செல்லக்கூடும் என்பதுதான் இதிலுள்ள க்ரிட்டிக்காலிட்டி.
அநேகமாக நரேந்திர மோடி இந்த ஃபெசிலிட்டிக்கு வந்து சென்ற பின் அந்த மொத்த க்ளீன் ரூம்களும் திரும்பவும் சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் செயல்பட சில நாட்கள் ஆகலாம்.
அல்லது அவர் வருவதால் உற்பத்தியை நிறுத்தி ஷட் டவுன் எடுத்திருக்கலாம்.
அல்லது Non Clean Corridor
என்றழைக்கப்படும் காரிடர் வழியாக அவரை அழைத்துச் சென்றிருக்கலாம்.
இத்தனை கட்டுப்பாடுகளுடன் தான் நம் நாட்டிலும் உலகின் எந்த நாட்டிலும் மருந்து ஆராய்ச்சி,மருந்து உற்பத்தி நடந்து வருகிறது.
இவை எதுவுமேயின்றிதான் நிலவேம்பு கஷாயங்களும் கபசுரகுடிநீரும் இதர நோ சைட் எஃபக்ட் 100% நேச்சுரல் மருந்துகளும் நம்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
So Hope you are clear about my profession now.
I'm a Cleanroom Engineer. Proudly
கதிர் ஆர்எஸ்
28/11/20
பிற்சேர்க்கை: இந்த தொழில் நுட்பம் semiconductors எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித்துறையிலும், தற்காலத்தில் மருத்துவ அறுவைசிகிச்சை கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு முன் நாங்கள் செய்து கொடுத்த கோவிட் சேம்பிள் கலெக்ஷன் பூத்திற்குக்கூட (
Nibun Techna
) இதே தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்தினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக