ஞாயிறு, 1 நவம்பர், 2020

வன்னி அரசு : கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன்!

Vanni Arasu : · கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்திய பாஜக அஸ்வத்தாமன்! தந்தி தொலைக்காட்சியில் இன்று வேல் யாத்திரை குறித்த விவாதத்தில் பங்கேற்றேன். பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என தொடர்ந்து புளுகிக்கொண்டே வந்தார் அஸ்வத்தாமன் என்னும் பாஜக நபர். நான் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். வைத்ததுமே பதற்றமாகி ஆட்டத்தை குலைக்கிற வகையில் குறுக்கும் நெடுக்குமாக கத்திக்கோண்டே இருந்தார். நெறியாளரும் எனக்கு வாய்ப்பை மறுத்தார். தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கடந்து போனார்.
பெண்களுக்காக வழக்கு போடும் ஒரு நபர் தமது சொந்த வாழ்வில் பெண்ணை அதுவும் தான் கட்டிய மனைவியை நிர்வாணப்படுத்தி அடிப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லையா?
இது பெண்களுக்கான குரல்தானே!
சரி என்ன குற்றச்சாட்டை முன்வைத்தேன் என்றால்,
1.சொந்த மனைவியை நிர்வாணப்படுத்தி அடித்து வரதட்சணை கேட்ட வழக்கு
2. தம் மீது புகார் கொடுத்த ஆதிதிராவிடர் சமூக பெண்ணை சாதியின் பெயரால் இழிவுபடுத்தி, சுத்தியலால் அடித்து கொலை முயற்சி வழக்கு
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இந்துக்கள் தான்.
இப்படிப்பட்ட பேர்வழிதான்
இந்து பெண்களுக்காக பேசுகிறாராம்.
சரி, அந்த ஏமாற்றுப்பேர்வழியின் குற்ற வழக்குகளின் முழுவிபரங்களை பார்ப்போம்.
வழக்கு எண் 1:
...........................
கடந்த 14.2.2016 அன்று தனது மனைவி துர்கா மற்றும் எட்டு மாத குழந்தையை, அவரது மாமனார் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால், அவர்களை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.
22.03.2016 அன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது. அரசு வழக்கறிஞர் ஒரு புதிய தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். அதாவது அக்யுஸ்ட் அஸ்வதாமனின் மனைவியை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை. அஸ்வதாமன் மீது அவரது மனைவி கொடுத்த வரதட்சனை புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தன்னை வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தும் நிலையில் விவாகரத்து கேட்டு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் முழுக்க முழுக்க குடும்ப பிரச்சனை. இதில் ஆட்கொணர்வு மனுவைக் கொண்டு தீர்வு சொல்ல முடியாது என்று சொல்லி அக்யூஸ்டு அஸ்வதாமனின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
எட்டு மாத கைக்குழந்தையுடன் இருந்த தனது மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, அடித்து விரட்டியவர் தான் இந்த அக்யுஸ்ட் அஸ்வதாமன். இவர் தான் இப்போது பெண்களுக்காக போராடும் பேர்வழியாக அவதாரம் எடுத்துள்ளார்.
வழக்கு எண் 2:
............................
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை தாலுகா, மதியனூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் - தனபாக்கியம் தம்பதியினர். இவர்கள் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகன் சிவானந்தனை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க விரும்பி, அக்யுஸ்ட் அஸ்வதாமன், அவரது தந்தை அல்லிமுத்து நடத்தும் அருள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு செல்கின்றனர். 13.6.2007 அன்று 70 ஆயிரம் பணத்தை கட்டி மகனை சேர்க்கின்றனர்.
அக்யுஸ்ட் அஸ்வதாமனும் அவரது தந்தையும் நடத்தும் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதும், சரியான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதும் பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கட்டிய பணத்தையும் மாறுதல் சான்றிதழையும் தருமாறு மாணவனின் தாயார் தனபாக்கியம், நிறுவனத்தை அணுகினார்.
அவர்கள் நீண்ட காலம் இழுத்தடித்து 4.1.2008 அன்று தருவதாக தனபாக்கியத்தை வரச்சொல்கின்றனர். அலுவலகத்தில் அஸ்வதாமனும், அவனது தந்தை அல்லிமுத்துவும் இருந்துள்ளனர். உள்ளே சென்ற தனபாக்கியத்தின் சேலையை பிடித்து இழுத்த அல்லிமுத்து, ‘பறத் தேவிடியா, பணத்த கொடுக்குறதுக்கு உங்கள வரச் சொல்லலடி, உங்கள ஒழித்துக்கட்ட தான் வரச்சொன்னோம்’ என்று இழிவாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். ‘இப்படி பணம் கேட்டு வந்தால் உயிரோடு விடமாட்டேன்’ என்று அத்துமீறிய அல்லிமுத்து குறித்து புகார் சொல்வேன் என்று தனபாக்கியம் போராடியுள்ளார். அப்போது அறையில் இருந்த அஸ்வதாமன், ‘உங்கள உயிரோடு விட்டாதாண்டி போலீஸ்ல புகார் கொடுப்பீங்க’ என்று சொல்லி, இரும்பு சுத்தியலை எடுத்து தனபாக்கியத்தை கொலை செய்யும் நோக்கத்தில் தலையில் ஓங்கி அடித்து ‘ஒழிந்து போடி’என்றார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்தவர்கள் அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு எண்: 12/08 பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அல்லிமுத்துவும், இரண்டாம் குற்றவாளியாக அஸ்வதாமனும் உள்ளனர். அல்லிமுத்து மீது இ.த.ச. 294, 323, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஸ்வதாமன் மீது இ.த.ச. பிரிவு 307படி கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை நடத்தாமல் தாமதப்படுத்தி வருகிறான் அக்யுஸ்ட் அஸ்வதாமன். மேலும், தான் பாஜகவில் இருப்பதாகவும், தன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தனபாக்கியம் குடும்பத்தினரை ரவுடி கும்பலை வைத்து மிரட்டி வருகிறான்.
தங்கள் உயிருக்கு அஞ்சிய தனபாக்கியம் குடும்பத்தினர், இப்போது தலித்துகளின் பாதுகாவலராக மாநில தலைவர் முருகனுக்கு கடிதம் எழுதினர். கல் உடைக்கும் தனது தந்தை வழி ஒட்டர் சாதி ஆட்கள் மூலம், சுத்தியலை வைத்தே அடித்து கொன்றுவிடுவேன் என்றும், தனது அம்மா வழி வன்னியர் சாதி ஆட்களிடம் சொன்னால் சும்மாவிடமாட்டார்கள் என்றும் அக்யுஸ்ட் அஸ்வதாமன் மிரட்டுவதாக அக்கடிதத்தில் சொல்லியுள்ளார்.
இந்த பாஜக அக்யுஸ்ட் அஸ்வதாமன் தான் இப்போது பெண்களுக்காக போராடுகிற பேர்வழி.
-வன்னி அரசு
31.10.2020
இணைப்பு:
1.அக்யுஸ்ட் அஸ்வதாமன்
2. பாஜக ரவுடி எச்.ராஜா உடன் A1 அல்லிமுத்து & A2 அஸ்வதாமன்
3. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்ட அஸ்வதாமன் மனைவி துர்கா
4. அஸ்வதாமன் துன்புறுத்தி வெளியேற்றிய அவரது மனைவி துர்கா மற்றும் குழந்தை
5 & 6. கட்டிய மனைவியை வரதட்சணை கேட்டு துரத்திவிட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்ட அஸ்வத்தாமன் வழக்கு விபரம்.
7 & 8. ஆதிராவிடர் பெண்ணை மானபங்கபடுத்தி கொலை முயற்சி செய்த வழக்கில் அஸ்வத்தாமன் அவரது தந்தை அல்லிமுத்து மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர்.
9 & 10. ஆதிதிராவிடர் பெண் தனபாக்கியத்தின் புகார் மனு.
11. கொலை முயற்சி வழக்கின் காவல்துறை இறுதி அறிக்கை.
12 & 13. அக்யுஸ்ட் அஸ்வத்தாமனால் மிராட்டப்படும் ஆதிதிராவிடர் பெண் தனபாக்கியம் பாதுகாப்பு கேட்டு பாஜக தலைவர் முருகனுக்கு அனுப்பிய கடிதம்.
14. அக்யுஸ்ட் அஸ்வத்தாமனின் தந்தை A1 அல்லிமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக