ஞாயிறு, 1 நவம்பர், 2020

இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா

போஸ்டர்
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், கடந்த 1999-ம் ஆண்டு வெளியான தாஜ்மகால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சமுத்திரம், மகாநடிகன், அல்லி அர்ஜுனா என சில படங்களில் நடித்து பிரபலமான மனோஜ், தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ள படம் மூலம் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அதே ஆண்டில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை மனோஜ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் தற்போது மனோஜ் இயக்க உள்ளது இந்த படத்தையா அல்லது வேறு கதையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக