Shyamsundar - tamil.oneindia.com :
டெல்லி: பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரிய அளவில் வெற்றிகளை
குவிக்கவில்லை என்றாலும் கூட நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்க
பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவின் இந்த திட்டத்திற்கு பின் மேற்கு வங்க
தேர்தலும் , 2024 லோக்சபா தேர்தலும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றிபெற்றுள்ளது.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி
அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக
கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது. இந்த
தேர்தலில் பாஜக அதிக வெற்றிபெற்று இருந்தாலும் கூட, நிதிஷ் குமார்தான்
முதல்வர் என்று பாஜக அறிவித்துள்ளது.
மோசம்
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று
இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில்தான் வென்று உள்ளது. தேசிய
ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43
இடங்களிலும்தான் வென்று இருக்கிறது. 1995க்கு பின் நிதிஷ் குமாரின் கட்சி
மிக மோசமாக ஒரு தேர்தலில் செயல்பட்டுள்ளது.மாநில கட்சி
பாஜகவிற்கு தற்போது நெருங்கிய மாநில கட்சி என்று எதுவும் இல்லை. சிரோன்மணி
அகாலி தளம் கட்சியும் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலக்கிவிட்ட நிலையில்
ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே பாஜகவிற்கு துணையாக உள்ளது. நிதிஷ் குமாரை
முதல்வராக நியமிக்கவில்லை என்றால் அந்த கூட்டணியும் உடைந்துவிடும்.
மோசம்
நிதிஷ் குமாரும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால்.. பாஜக தேசிய
அளவில் மாநில கட்சிகளின் துணை இன்றி தனித்து விடப்படும். இதனால் 2024
லோக்சபா தேர்தலில் தனித்து விடப்பட கூடாது என்று பாஜக நினைக்கிறது. நிதிஷ்
குமாரின்.. நட்பு இப்போது அவசியம்.. அவருக்கு இப்போது பீகாரில் வாய்ஸ்
குறைந்து போனாலும் கூட அவரின் நட்பு அவசியம் என்று பாஜக கருதுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக