வெள்ளி, 13 நவம்பர், 2020
சென்னை சௌகார்பேட்டையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகள் .. தலில் சந்த்.. புஷ்பா பாய்.. கணவர் ஷீத்தல் .. ரூ.5 கோடி + சொத்திலும் பங்குகேட்டு ராஜஸ்தான் ஜெயமாலா...
Hemavandhana -
/tamil.oneindia.com :
சென்னை: "ஒரு நோயாளி புருஷனை ஏன் தலையில கட்டி வெச்சீங்க" என்று மாமனாரை
கட்டிப்போட்டு விட்டு கேள்வி எழுப்பி உள்ளார் மருமகள் ஜெயமாலா..
அதற்குபிறகுதான் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டு தள்ளி உள்ளார்..
சென்னையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்த மருமகள் பற்றிதான்
பல பகீர் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74
வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.
இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன்
ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை
பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக்
கொண்டு புனேவில் இருக்கிறார்
கருத்து வேறுபாடு
ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண்
குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால்,
டைவர்ஸ் கேட்டுள்ளார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும்
தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான்,
மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு
வந்துள்ளார். அதாவது அந்த சொத்தின் மதிப்பு 5 கோடி ரூபாயாம்
விமானம்
இதில் இன்னொரு வேலையையும் ஜெயமாலா செய்திருக்கிறார்.. போலீஸாருக்கு
சந்தேகம் ஏற்படாமல் இருக்க இவர்கள் காரில் ஒரு குரூப்பாகவும், ரயிலில் ஒரு
குரூப்பாகவும் புனேவில் இருந்து கிளம்பி வந்துள்ளனர்.. இப்போது இவர்களை
கைது செய்ய தனிப்படை போலீஸார் விமானம் மூலம் புனே சென்றனர்... அதேபோல,
காரில் சென்று கொண்டிருக்கும் நபர்களை பிடிக்க 2 தனிப்படையும், ரயிலில்
சென்ற நபர்களை பிடிக்க மற்றொரு தனிப்படையும் முடுக்கி விடப்பட்டன.. இதற்காக
ரயில்வே போலீஸ் உதவியையும் போலீஸார் நாடினர்.
நகை, பணம்
3 பேரையுமே ஜெயமாலாதான் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று போலீசார் வலுவாக
சந்தேகப்படுகிறார்கள். எனினும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதால் விரைவில்
பிடிபடுவார்கள், உண்மை வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.. 3
பேரையும் கொன்றுவிட்டு, வீடு முழுக்க தேடி நகை, பணத்தையும் சாவகாசமாக
எடுத்து கொண்டு போயுள்ளார் ஜெயமாலா.. ஆனால் துப்பாக்கியால் சுடும்போது,
அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது.. அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து
கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள்
நினைத்துவிட்டனராம்! இந்நிலையில், புனேவில் சம்பந்தப்பட்ட ஜெயமாலா உட்பட 3
பேரையுமே போலீசார் கைது செய்துவிட்டார்களாம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக