வியாழன், 19 நவம்பர், 2020

தாயை வன்கொடுமை செய்துவிட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்த மகன் ... கர்நாடக மாநிலம்

nakkeeran : கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் இறந்த நிலையில், 21 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண்ணிற்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மகனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் அப்பெண் வேலைக்கு சென்றுக்கொண்டு இருந்தபோது, அவரை வழிமறித்த மகன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஏற்பட்ட தகராறில், கடும் ஆத்திரமடைந்த அவர், தனது தாயை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணின் மகனை கைது செய்து, நீதிமன்றக் காவலில் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக