வெள்ளி, 13 நவம்பர், 2020

நிதிஷ் குமார் முதல்வர் பதவி கேட்கவில்லை திடீர் அறிவிப்பு

 dhinamalar :பாட்னா:''முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை,'' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூறினார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 243 தொகுதிகளில், 125 தொகுதிகளில் வென்று, தே.ஜ., கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துள்ளது.இதையடுத்து, பீஹார் முதல்வராக, ஏழாவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நிதிஷ் குமார் கூறியதாவது:பஹார் தேர்தலில், தே.ஜ., கூட்டணிக்கு, மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.             இந்த கூட்டணியே, ஆட்சியமைக்கும். முதல்வர் பதவிக்கு, நான் உரிமை கோரவில்லை. தே.ஜ., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தான், முதல்வர் தேர்வு செய்யப்படுவர். பதவியேற்பு விழா பற்றியும், அப்போதுதான் முடிவு செய்யப்படும். தே.ஜ., கூட்டணிக்கு விரோதமாக செயல்பட்ட, லோக் ஜனசக்தி கட்சியின் மீது, பா.ஜ., தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணியில் அந்த கட்சி தொடர்வது பற்றி, பா.ஜ., தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக