ஞாயிறு, 1 நவம்பர், 2020

50 வருட லீஸ்..அதானி மங்களூரு விமான நிலையத்தைக் கைப்பற்றினார்.! ஏற்கனவே லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவ்ஹாத்தி

Prasanna Venkatesh Krishnamoorthy :  GoodReturns அதானி குழுமம் இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது மங்களூரு விமான நிலையத்தை 50 வருட குத்தகை ஒப்பந்தத்திற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா-விடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. அதானி குழுமம் ஏற்கனவே லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவ்ஹாத்தி ஆகிய 5 விமான நிலையங்களைக் கைபற்றிய நிலையில் 6வது விமான நிலையமாக மங்களூரு விமானத்தைக் கைப்பற்றியுள்ளது. அதானி குழுமம் சமீபத்தில் தனது கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ (சிறப்புப் பொருளாதாரப் பகுதி) நிறுவனம் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தில் வெற்றிகரமாக 75% பங்குகளைச் சுமார் 12,000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது விமானப் போக்குவரத்துத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டு வருகிறது.


6 முக்கிய விமானநிலையம் மத்திய அரசு பிப்ரவரி 2019ல் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது. இதன் படி லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவ்ஹாத்தி விமான நிலையங்களைக் குத்தகை விடுவதற்கான பணிகளைத் துவங்கியது.
திருவனந்தபுரம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தில் பல்வேறு அமைப்புகள் குத்தகை கோரப்பட்டதால் பல்வேறு பிரச்சனைகளும், இந்த விமான நிலையைத்தை தனியார்மயமாக்குவதில் சிக்கலும், போராட்டங்களும் வெடித்தது. எனினும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை ஒப்பந்தத்தையும் அதானி கைப்பற்றியது. 50 வருடம் 50 வருடம் இந்த ஒப்பந்தம் மூலம் அதானி குழுமம் லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவ்ஹாத்தி விமான நிலையங்களை இயக்கம், மேலாண்மை, விரிவாக்கம் ஆகிய பணிகளை அடுத்த 50 வருடத்திற்கு மேற்கொள்ளப் போகிறது.


வர்த்தகம் விமானப் பயணிகள் எண்ணிகையும், சேவையும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில் அதானி குழுமம் இப்புதிய வர்த்தகச் சந்தைக்கு நுழைந்து 6 பெரும் விமான நிலையங்களைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை அடையும்.

ஒப்பந்தம் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் அதானி குழுமம் மத்தியில் நடந்துள்ள ஒப்பந்தம் மூலம் அக்டோபர் 31 முதல் மங்களூரு விமான நிலையமும், நவம்பர் 2ஆம் தேதி முதல் லக்னோ விமான நிலையமும், நவம்பர் 11 முதல் அகமதாபாத் விமான நிலையமும் முழு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர 3 விமான நிலையங்கள் அதாவது திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவ்ஹாத்தி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் செப்டம்பர் மாதம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக